1. Home
  2. தமிழ்நாடு

முக்கிய அறிவிப்பு..! வாக்காளர் அடையாள அட்டை பயன்படுத்துபவர்களின் கவனத்திற்கு..

1

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இது ஜனநாயக கடமையாகவும் கருதப்படுகிறது. இவ்வாறு வாக்களிப்பதற்கு மக்களுக்கு தேவையான ஆவணமாக கருதப்படுவது  வாக்காளர் அடையாள அட்டை. 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்களிக்கும் தகுதியை பெறுவார்கள். எனவே 18 வயது பூர்த்தியானவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது கட்டாயமான ஒன்றாகும்.

தற்போது வாக்காளர் அடையாள அட்டையை சரிபார்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.  வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களின் பெயர் , முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்க்க உள்ளனர். இந்த வாக்காளர் சரிபார்க்கும் பணி அக்டோபர் 18 வரை நடக்க உள்ளதாகவும் இதனால் பொதுமக்கள் ஏதேனும் பிழைகள் இருந்தால் உடனே அலுவலரிடம் தெரிவிக்கலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like