1. Home
  2. தமிழ்நாடு

முக்கிய அறிவிப்பு! புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்து காத்திருப்பவரா நீங்கள்..?

1

தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 359 கார்டுகள் இருக்கின்றன. மானிய விலையிலும், விலையில்லாமலும் அரிசி சர்க்கரை, பருப்புகள், பாமாயில் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டு என்பது வெறும் பொருட்கள் வாங்க பயன்படும் அட்டையாக மட்டுமின்றி, தமிழக அரசின் பல்வேறு சலுகைகள் பெறுவதற்கான அடையாள அட்டையாகவும் உள்ளது

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியாகி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.இதனைத் தொடர்ந்து, ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கின்றது. இதனை அடுத்து, ஜூன் 5-ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணியானது விறுவிறுப்பாக நடைபெற தமிழ்நாடு அரசு, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதேநேரம், விக்கிரவாண்டி தொகுதியில் ஜூன் மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால், அம்மாவட்டத்தை தவிர பிற மாவட்டங்களில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணியானது நடைபெறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே மகளிர் உரிமை தொகை வழங்கப்படுவதால், புதிய கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு அதிகமானது. அதாவது ஒரு குடும்பத்தில் இருக்கும் மாமியார், மருமகள் இருவரும் மகளிர் உரிமைத்தொகை பெற வேண்டும் என்பதற்காக ஒரே வீட்டில் இருந்தாலும், புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க தொடங்கினார்கள். 2022-ம் ஆண்டில் 2 கோடியே 20 லட்சம் ஆக இருந்த ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை கடந்த ஓராண்டாக நிறுத்திவைக்கப்பட்ட காரணத்தால் 2 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 359 கார்டுகள் என்ற நிலையில் உள்ளது,

இதற்கிடையில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் காரணமாக குடும்பத்தில் இருப்பவர்கள் தங்களை பிரித்து கொண்டு புதிய ஸ்மார்ட் கார்டுக்கு பலரும் விண்ணப்பிக்க தொடங்கினர். அதனால் புதிய கார்டுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி நடைபெற இருக்கிறது.

Trending News

Latest News

You May Like