1. Home
  2. தமிழ்நாடு

இஸ்ரோ வெளியிட்டுள்ள முக்கிய தகவல்..!

1

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “நிலவின் மேற்பரப்பில் வெப்பநிலையை ஆய்வு செய்த பிரக்யான் ரோவர், ஆய்வு தகவலை லேண்டர் மூலம் இஸ்ரோவுக்கு அனுப்பியுள்ளது. பிரக்யான் ரோவரில் உள்ள ChaSTE என்ற ஆய்வுக் கருவி நிலவின் மேற்பரப்பு வெப்ப நிலையை ஆய்வு செய்துள்ளது. நிலவின் மேற்பரப்பில் 10 அடி ஆழம் வரையிலான வெப்பநிலை குறித்து ஆய்வுச் செய்துள்ளது.

நிலவின் தென்துருவத்தில் சராசரி வெப்பநிலை- இஸ்ரோ வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

நிலவின் மேற்பரப்பில் ஊடுருவி பல்வேறு கட்டங்களில் ஆய்வுச் செய்த வெப்பநிலை குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெப்பநிலை பரிசோதனைக் கருவியில் உள்ள 10 சென்சார் மூலம் வெப்பநிலைப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரோ வெளியிட்டுள்ள வரைபடத்தில் பல்வேறு ஆழங்களில் நிலவின் வெப்பநிலை மாறுபாடு தெரிய வந்துள்ளது. நிலவின் தென்துருவத்தின் சராசரி வெப்பநிலை பதிவுச் செய்யப்படுவது இதுவே முதல்முறை. வெப்பநிலை ஆய்வு கருவியை பெங்களூரு மற்றும் அகமதாபாத் இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like