1. Home
  2. தமிழ்நாடு

வெளியான முக்கிய தகவல்..! கோவை கூடைப்பந்து வீராங்கனை இறப்புக்கு சிக்கன் ரைஸ் காரணமில்லையாம்..!

1

கோவை சுகுணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராபின் டென்னிஸ் (40). இவருடைய மகள் பெயர் எலினா லாரெட் (15). இவர் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.

எலினா கூடைப்பந்து வீராங்கனையாக உள்ளார். இதனால் பள்ளி சார்பில் பல இடங்களில் நடக்கும் கூடைப்பந்து போட்டிகளில் எலினா பங்கேற்று வந்தார். இந்நிலையில் தான் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நடந்த கூடைப்பந்து போட்டியில் எலினா தனது அணியினருடன் பங்கேற்றார். இதற்காக அவர் கடந்த 8 ம்தேதி ரயிலில் குவாலியர் சென்று போட்டியில் பங்கேற்றார். போட்டி முடிந்த பிறகு அவர் பிற மாணவிகளுடன் நேற்று முன்தினம் ரயிலில் ஊர் திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது மாணவி எலினா ரயிலில் சிக்கன் ரைஸ், பர்க்கர் வாங்கி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு அவருக்கு உடல்நல பிரச்சனை ஏற்பட்டுள்ளது. வயிற்று வலியால் மாணவி எலினா பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் சென்னை வந்ததும் தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆனார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் அவர் உடல்நலம் தேறினார்.

அதன்பிறகு சென்னை பெரவள்ளூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக உறவினர்கள் மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே எலினா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதன்பிறகு உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையே தான் மாணவி ரயில் கோவை வீராங்கனை உயிரிழப்புக்கு ரயிலில் வழங்கப்பட்ட சிக்கன் ரைஸ், பர்க்கர் தான் காரணம் என்று சொல்லப்பட்டது. ஆனால் அதனை ரயில்வே நிர்வாகம் மறுத்துள்ளார். இதுதொடர்பாக ரயில்வே சார்பில், ‛‛மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் இருந்து மாணவி கிளம்பிய விரைவு ரயிலில் சிக்கன் ரைஸ் ஐஆர்சிடிசி விநியோகிக்கும் உணவுப்பட்டியலில் கிடையாது" என்று தெளிவுப்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் மாணவி எலினாவின் இறப்புக்கு சிக்கன் ரைஸ் காரணம் இல்லை என்று பெரவள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் தரப்பில், ‛‛மாணவி எலினா இறப்புக்கு சிக்கன் ரைஸ் காரணம் இல்லை. அந்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அப்போது உடலில் வயிறு, மார்பு பகுதியில் சதைகள் கிழிந்துள்ளது. இதனால் இதயம் செயலிழந்து இறந்து இருக்கலாம். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது''என்று கூறியுள்ளனர்.

Trending News

Latest News

You May Like