1. Home
  2. தமிழ்நாடு

முக்கிய தகவல் : இனி இந்த ரேஷன் அட்டைகளுக்கு அரிசி கிடையாது..!

1

இந்தியாவிலேயே பொதுவிநியோக திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் உள்பட பல முன்னோடி திட்டங்களை செயல்படுத்துவதில் முதன்மை மாநிலமாக இருக்கிறது தமிழ்நாடு. சமூகநீதி கோட்பாட்டில் பயணிக்கும் தமிழ்நாட்டில் பல திட்டங்கள் பல மாநிலங்களில் செயல்படுத்துவதற்கு முன்பாக, ஏறத்தாழ 20, 25 ஆண்டுகளுக்கு முன்பாகவே செயல்படுத்திய பெருமைக்குரிய மாநிலம். அதில் ஒன்று பொதுவிநியோக திட்டம். ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு தேவையான அரிசி, கோதுமை உட்பட அத்தியாவசிய பொருட்களை வழங்கும் திட்டம் 60 ஆண்டுகளுக்கு முன்பாகவே தொடங்கிவிட்டது.

தமிழ்நாட்டில் தற்போது ஐந்து வகையான குடும்ப அட்டைகள் உள்ளன. முன்னுரிமைக் குடும்ப அட்டைகள் (PHH), முன்னுரிமைக் குடும்ப அட்டைகள், அதாவது அந்தியோதயா அன்னயோஜனா கார்டுகள் (PHH-AAY), முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் (NPHH), முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள், அதாவது சர்க்கரை கார்டு (NPHH-S) மற்றும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள், அதாவது எப்பொருளும் வேண்டாத கார்டுகள் (NPHH-NC) ஆகிய குடும்ப அட்டைகள் உள்ளன. முன்னுரிமைக் குடும்ப அட்டைகள் (அந்தியோதயா அன்னயோஜனா) மற்றும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-இன்படி வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி வழங்கப்படுகின்றன. இதர குடும்ப அட்டைகள் பயனாளிகளின் விருப்பத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன.

மத்திய அரசு விதி சொல்வது என்ன?

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013, தமிழ்நாட்டில் 2016 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது நடைமுறையில் உள்ள அனைவருக்குமான பொது விநியோகத் திட்டமானது கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் முன்னதாகவே நம் தமிழ்நாடு அரசால் நடைமுறைப்படுத்திச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டமானது சமூகப் பொருளாதாரப் பேதமின்றி அனைத்துக் குடிமக்களுக்கும் உணவுப் பாதுகாப்பினை உறுதிசெய்து வருகிறது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி முன்னுரிமைக் குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் அரிசி அல்லது கோதுமை வழங்கப்பட்டால் போதும். 

தமிழ்நாடு அரசின் திட்டம்

ஆனால், தமிழ்நாட்டின்அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தில் முன்னுரிமை மற்றும் முன்னுரிமையற்ற அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் கோதுமையுடன் சர்க்கரை, மண்ணெண்ணெய் மற்றும் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை விநியோகிக்கப்படுகின்றன. மேலும், குடும்ப அட்டைதாரர்கள் கூடுதலாக சத்தான ஊட்டச்சத்தினைப் பெற்றிட வேண்டும் என்ற நோக்கில் முதற்கட்டமாக நீலகிரி மற்றும் தருமபுரி ஆகிய இரு மாவட்டங்களில் அரிசி அட்டைதாரர்களுக்கு அரிசிக்குப் பதிலாக கேழ்வரகு 2 கிலோ விநியோகம் செய்யப்படுகிறது. இத்திட்டம் 03.05.2023 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Trending News

Latest News

You May Like