முக்கிய தகவல்..! விஜய் போட்டியிட போகும் தொகுதி எது?
தருமபுரி மாவட்ட தவெக தலைவர் சிவா இது தொடர்பாக தகவல் வெளியிட்டு உள்ளார்.
இது போக சமீபத்தில் நடந்த மீட்டிங்கில் தனி மனித தாக்குதல் கூடாது என்று த.வெ.க. சார்பாக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஊடக விவாதங்களில் தனி மனித தாக்குதல்கள் கூடாது.. தவறாக பேச கூடாது.. யாரையும் தனிப்பட்ட வகையில் கடுமையாக பேச கூடாது என விஜயின் அறிவுரைப்படி பொதுச் செயலாளர் என். ஆனந்த் அறிவுறுத்தி உள்ளார்.
இன்று நடத்த ஆலோசனை கூட்டத்தில் இது தொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. மாற்றுக் கட்சியினர் வைக்கும் எதிர் கருத்துகளுக்கு கண்ணியமான முறையில் பதிலடி கொடுக்க வேண்டும்,, அநாகரீகமாக பேச கூடாது தவெக கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் குழுவை அதிகப்படுத்தவும் ஆலோசனை
உங்களை கடுப்பேற்றும் வகையில் பேசினால் அதற்கு விழுந்துவிட கூடாது. எப்படி பேசினாலும் கண்ணியமாக பதில் கொடுக்க வேண்டும். மக்களுக்கு உதாரணமாக நாம் இருக்க வேண்டும். மற்ற கட்சியினர் பேசுகிறார்கள் என்பதற்காக நாம் பேச கூடாது என்று.. ஊடக விவாதங்களை எவ்வாறு அணுக வேண்டும் என நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தி உள்ளார்.
இது ஒரு பக்கம் இருக்க..இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை த.வெ.க. தலைவர் விஜய் உன்னிப்பாக கவனித்து வருகிறாராம். இதற்காக முக்கியமான சில உத்தரவுகளை கட்சி நிர்வாகிகளுக்கு பிறப்பித்துள்ளாராம். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை முன்னெடுத்திருக்கிறது தமிழக தேர்தல் ஆணையம். வருகிற சனி மற்றும் ஞாயிறு கிழமைகளிலும், அதேபோல அடுத்த வாரத்திலும் நடக்கவிருக்கிறது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் மிகவும் கவனமுடனும் உன்னிப்பாகவும் கவனித்து சில நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட அளவிலான தங்களின் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது அக்கட்சிகளின் தலைமை.
இந்த நிலையில், இதே திருத்தப்பணிகளை த.வெ.க. தலைவர் விஜய்யும் உன்னிப்பாக கவனித்துள்ளார். இதுகுறித்து, மாநில நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது, வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை கிராமம் தொடங்கி நகரம் வரை விழிப்புணர்வை ஏற்படுத்த நம்கட்சியினருக்கு அறிவுறுத்த வேண்டும் என நிர்வாகிகள் கூறியிருக்கிறார்கள்.
அதனை ஏற்றுக்கொண்ட விஜய், இது குறித்து ஒரு கடிதத்தை நம் கட்சியினருக்கு நீங்கள் அனுப்பி வைத்துவிடுங்கள் என்று புஸ்ஷி ஆனந்திடம் சொல்லியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து மேலும் ஆலோசனை நடந்த போது, ''நம் தொண்டர்கள் அனைவரும் தங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என சரிபார்க்கச் சொல்லுங்கள். எனக்கு கிடைத்த தகவலின் படி, நம் கட்சியினரின் பெயரை பட்டியலில் இருந்து நீக்கிவிட ஆளும் கட்சி திட்டமிடுவதாக தெரிகிறது. அதனால், பட்டியலில் தங்களின் பெயர் இருப்பதை உறுதி செய்துகொள்ள கட்சியினருக்கு அறிவுறுத்துங்கள். அடுத்து, புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களில் யாரெல்லாம் இன்னும் வாக்காளர் அடையாள அட்டை பெறாமல் இருக்கிறார்களோ அவர்களை இந்த திருத்தப் பணிகளை பயன்படுத்திக்கொள்ள அட்வைஸ் பண்ணுங்கள் '' என மாநில நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார் விஜய்.
மாவட்ட கட்டமைப்பை ஆய்வு செய்து அறிக்கை அளியுங்கள் என பொதுச்செயலாளர் ஆனந்துக்கு, தவெக தலைவர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்காக மாவட்ட அளவிற்கு நிர்வாகிகள் சோதனை செய்யப்பட வேண்டும். டிசம்பர் மாதத்திற்குள் தள் ஆய்வுப் பணியை முடிக்கவும் விஜய் அறிவுறுத்தி உள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் சென்று ஆய்வு செய்யவும் ஆனந்துக்கு, தவெக தலைவர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.ஒவ்வொரு மாவட்டத்தில் கட்சி நிலை.. அதில் உள்ள நிர்வாகிகள்.. நிறை குறைகளை ஆய்வு செய்ய வேண்டும். இதற்காக ஆக்சன் படை ஒன்றை உருவாக்கவும். நேரடியாக சென்று ஆய்வு பணிகளை செய்யுங்கள். முதற்கட்டமாக பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நடைபெற்று வரும் ஆய்வு பணிகளை கண்காணியுங்கள். மாநிலம் முழுக்க எல்லா ஏரியாவிற்கும் செல்லுங்கள் என்று விஜய் உத்தரவு பிறப்பித்து உள்ளாராம்.