அதிமுக அவசர செயற்குழுவின் முக்கிய தீர்மானங்கள்..!
அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக அலுவலகமான புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் அவைத் தலைவர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதற்காக உறுப்பினர்கள் அனைவருக்கும் தனி தனியே அழைப்பிதழ் அனுப்பப்பட்ட நிலையில், அனவரும் அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து அதிமுக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று பொதுச் செயலாளர்எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இதனையடுத்து இன்று சென்னையில் திட்டமிட்டபடி அதிமுக கூட்டம் தொடங்கி நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், மொத்தம் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி,"
1. 2024, நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் கழகக் கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கும்; அயராது தேர்தல் பணியாற்றிய கழக நிர்வாகிகளுக்கும், கழகத் தொண்டர்களுக்கும், தோழமைக் கட்சியினருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.. கழகத்தின் வெற்றிக்காக அயராது உழைத்திட்ட கழகப் பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களுக்கு நன்றியும், பாராட்டும்!
2. அ)நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்காத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்! ஆ) விலையில்லா வேட்டி, சேலை வழங்குவதிலும், விலையில்லா 5 பள்ளிச் சீருடைகள் வழங்குவதிலும் மெத்தனப் போக்கோடு இருந்து வரும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்!
3.மக்கள் நலன் கருதி மின்கட்டண உயர்வை ரத்து செய்திடவும்; மாதாந்திர மின் கணக்கீட்டு முறையை அமல்படுத்திடவும் விடியா திமுக அரசை வலியுறுத்தல்!
4.தமிழ் நாட்டின் ஜீவாதார உரிமைகளைக் காப்பாற்றத் தவறிய விடியா திமுக அரசின் மெத்தனப் போக்கிற்கு கடும் கண்டனம்!
5.மக்கள் நலன் கருதி, கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வந்த உன்னதமான பல திட்டங்களை, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முடக்கி செயலிழக்கச் செய்து வரும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்!
6.அ) தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்!
ஆ) மீனவர்கள் நலனில் அக்கறை செலுத்தாத விடியா திமுக அரசுக்கும், மத்திய அரசுக்கும் கடும் கண்டனம்!
7.அ) மத்திய நிதிநிலை அறிக்கையில், தமிழ் நாட்டிற்குத் தேவையான திட்டங்களை அறிவிக்காததற்கும்; போதுமான நிதியை ஒதுக்காததற்கும் மத்திய அரசுக்கு கண்டனம்!
ஆ) மருத்துவக் காப்பீடு பிரீமியத்திற்கு 18 சதவீத GST வரியை 22 ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தல்!
இ) வயநாடு நிலச் சரிவை, தேசியப் பேரிடராக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தல்!
8.அ) தமிழ் நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவுக்குக் காரணமான விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்!
ஆ)தொழில் வளர்ச்சி குன்றியதற்கு காரணங்களை அறிந்து, அவற்றை சரிவர நிவர்த்தி செய்யாத விடியா திமுக அரசுக்கு கண்டனம்!
இ)நிர்வாகத் திறமையின்மை காரணமாக, கடன்மேல் கடன் வாங்கியும், வரிமேல் வரி விதித்தும், மக்களை கடனாளியாக்கியதுதான் விடியா திமுக அரசின் சாதனை!
விடியா திமுக அரசின் மூன்றாண்டு கால ஆட்சி -'சாதனை ஆட்சி அல்ல, வேதனை ஆட்சியே!
9)கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் வகுத்துத் தருகின்ற தேர்தல் வியூகப்படி, வர இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலிலும்; 2026, சட்டமன்றப் பொதுத் தேர்தலிலும் கழகம் மகத்தான 32 வெற்றி பெறும் வகையில், கழக நிர்வாகிகள் அனைவரும் தேர்தல் பணியாற்றி, வெற்றிக் கனியைப் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகிய இருபெரும் தெய்வங்களுக்கு சமர்ப்பிக்க சூளுரை!" உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.