முக்கிய அறிவிப்பு : நாளை வணிகர் தினம்...கடைகளுக்கு விடுமுறை..!
வணிகர்கள் மே 5-ந்தேதியை வணிகர் தினமாக கொண்டாடி வருகின்றனர்... வணிகர் தினத்தன்று வழக்கமாக கடைகள் வணிக நிறுவனங்கள் மூடப்படுவது வழக்கம்.
இதனால், தமிழகம் முழுதும் நாளை கடைகள் மூடப்படும் என, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு உள்ளிட்ட பல்வேறு வணிகர் அமைப்புக்கள் அறிவித்துள்ளன. அதேநேரம், பால், மருந்தகம் போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் வழக்கம் போல செயல்படும்.
அதே போல் ஒவ்வொரு வணிகர் சங்கமும் தங்களது சங்க நிர்வாகிகளை திரட்டி மாநாடு நடத்துவதும் வழக்கம்.. நாளை 41 வது வணிகர் தினத்திற்கான மாநில மாநாடு மதுரையில் விடுதலை முழக்க மாநாடாக நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள வணிகர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். இதில் வியாபாரிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள்,அவர்களின் மீதான அத்துமீறல்கள் குறித்து விவாதிக்கப்படும். அதனை முடிவுக்கு கொண்டு வரக்கூடிய விடுதலை முழக்க மாநாடாக நடத்தப்பட உள்ளது.