1. Home
  2. தமிழ்நாடு

முக்கிய அறிவிப்பு.. தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இன்று வெளியாகிறது !

முக்கிய அறிவிப்பு.. தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இன்று வெளியாகிறது !


இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகைப் பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளிட்ட சிபிஎஸ்இ பாடத்திட்டம் பின்பற்றப்படும் பள்ளிகளில், ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை ஆசிரியராகப் பணியாற்ற ‘சி-டெட்’ எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

அந்த வகையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் 16ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான நுழைவுச்சீட்டை சிபிஎஸ்இ இன்று வெளியிடுகிறது. இந்த தேர்வை எழுத விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது நுழைவுச்சீட்டை https://ctet.nic.in என்ற வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அறிவிப்பு.. தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இன்று வெளியாகிறது !

ஆன்லைன் முறையில் கணினி வழியாக வரும் 16 முதல் ஜனவரி 13 (2022) வரை இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதில் வரும் 16 முதல் 31ஆம் தேதி வரை தேர்வு எழுத விருப்பம் தெரிவித்திருந்த விண்ணப்பதாரர்களுக்கான நுழைவுச்சீட்டு மட்டுமே தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. ஜனவரி 1 முதல் 13 வரை தேர்வு எழுத விருப்பம் தெரிவித்திருந்த விண்ணப்பதாரர்களுக்கான நுழைவுச்சீட்டு விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இரண்டு கட்டங்களாக இந்த தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியிடப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது. அதன்படி இன்று இரண்டாவது கட்ட நுழைவுச்சீட்டு வெளியிடப்படுகிறது. இதில் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத வேண்டிய தேர்வு மையத்தின் விவரம் குறிப்பிடப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அறிவிப்பு.. தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இன்று வெளியாகிறது !

முதல் கட்டமாக வெளியிடப்பட்ட நுழைவுச்சீட்டில் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் எந்த நகரத்தில், எந்த தேதியில் தேர்வு எழுத வேண்டுமென குறிப்பிடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வு ஆண்டுதோறும் பிப்ரவரி, ஜூலை மாதங்களில் நடத்தப்படுகிறது. கொரோனா காரணமாகக் கடந்த ஆண்டு தேர்வு இந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்ட நிலையில், 2021-ம் ஆண்டுக்கான தேர்வு தற்போது நடைபெற உள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like