1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..! டிஎன்பிஎஸ்சி குரூப் 4, போலீஸ் தேர்வு..!

1

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 3935 காலி பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு குருப்-IV தேர்வுக்கான அறிவிப்பாணை 25.04.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வானது 12.07.2025 அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வினை போட்டித்தேர்வர்கள் சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில் குருப்-IV தேர்வுக்கான கட்டணமில்லா முழு மாதிரி தேர்வுகள் (FULL MOCK TEST ) மாநில மற்றும் மாவட்ட அளவில் 21.06.2025, 25.06.2025, 28.06.2025, 02.07.2025 மற்றும் 05.07.2025 ஆகிய தேதிகளில் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் முற்பகல் 10.00 மணி அளவில் நடைபெறவுள்ளன. 

இம்மாதிரித் தேர்வுகள் டி.என்.பி.எஸ்.சி ஆல் நடத்தப்படும் தேர்வு போன்று 200 வினாக்கள் கொண்டதாகவும் OMR தாளினைக் கொண்டும் நடத்தப்படும்.
மேற்கண்ட முழு மாதிரித் தேர்வுகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகலினை 9499055902 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து போட்டித்தேர்வர்களும் இம்மாதிரித் தேர்வுகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், இதுதொடர்பான விவரங்களுக்கு 0431-2413510 என்ற திருச்சிராப்பள்ளி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

காவல் சார்பு ஆய்வாளர்கள் மாதிரி தேர்வு 

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் காவல் சார்பு ஆய்வாளர்கள்
(தாலுகா) 933 மற்றும் காவல் சார்பு (ஆயுதப்படை) ஆய்வாளர்கள் 366 பணிக்காலியிடங்களுக்கான அறிவிக்கை 04.04.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வினை போட்டித்தேர்வர்கள் சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு கட்டணமில்லா மாதிரி தேர்வுகள் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 01.07.2025, 04.07.2025, 08.07.2025, 11.07.2025, 15.07.2025, 18.07.2025, 22.07.2025, 25.07.2025, 29.07.2025 மற்றும் 01.08.2025 ஆகிய தேதிகளில் காலை 10.30 மணி அளவில் துவங்கப்படவுள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து போட்டித்தேர்வர்களும் மாதிரி தேர்வில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், மாதிரி தேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் studycircletrichy@gmail.com 61603 60160660 முகவரியில் பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு 0431-2413510, 9499055901 என்ற திருச்சிராப்பள்ளி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத் தொலைபேசி/அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Trending News

Latest News

You May Like