1. Home
  2. தமிழ்நாடு

இலவச லேப்டாப் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

1

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2012 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தால் ஏழை எளிய மாணவர்கள் பலரும் பயனடைந்து வந்தனர். ஆனால் நிதி நெருக்கடி காரணமாக கடந்த 2 ஆண்டுகளாகவே மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், மாணவர்களுக்கு இந்த ஆண்டு இலவச லேப்டாப் வழங்கப்படுமா?? இல்லை இத்திட்டம் நிறுத்தப்படுமா?? என பொதுமக்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது கொரோனா தொற்றுக்கு பிறகு நிதி நெருக்கடி மிகவும் பற்றாக்குறையாக உள்ளது. இதன் காரணமாக தான் இரண்டு ஆண்டுகள் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படவில்லை.

இதையடுத்து, இந்த திட்டத்தின் மூலம் கூடிய விரைவில் அனைத்து மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படும் என்றும் இது குறித்து அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like