வெளியான முக்கிய அறிவிப்பு : இனி நாள் முழுவதும் உணவு..!
துணை முதல்வர் உதயநிதி வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது: மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான #திராவிட_மாடல் அரசு எல்லோருக்குமான அரசாக திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் செயல்படுத்தப்படும் அன்னதான திட்டத்தால் ஆண்டுக்கு 3.5 கோடி பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.
அந்த வகையில், நம் முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், #ChepaukTriplicane தொகுதியில் உள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமை நாட்கள் - புரட்டாசி மாதம் மற்றும் பொதுமக்கள் அதிகமாக வருகிற முக்கிய தினங்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தோம். மேலும், கோயிலுக்கு வருகை தந்த பொதுமக்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு மகிழ்ந்தோம். அவர்களுக்கு என் அன்பும், வாழ்த்தும் என்று தெரிவித்துள்ளார்.
.png)