தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் டிச.9, 10 ஆகிய 2 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அறிவிப்பு
தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற டிசம்பர் 9, 10 ஆகிய நாட்களில் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். அலுவல் ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை அறிவித்தார். இந்த கூட்டத்தில், ஃபெஞ்சல் புயல் பாதிப்பு, 2025 சட்டமன்ற கூட்டத்தொடர், முக்கிய அரசியல் விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது