1. Home
  2. தமிழ்நாடு

அசைவ பால் இறக்குமதி..! அனுமதிக்கு வாய்ப்பே இல்லை : அமெரிக்காவிடம் இந்தியா உறுதி..!

1

அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியாவுக்குப் பிறகு பேச்சைத் தொடங்கிய பல நாடுகள கையெழுத்திட்டு விட்டது. ஆனால், பால் பண்ணைத் துறைதான் இந்தியாவுடனான பேச்சில் இழுபறியாக இருக்கிறது.

வேளாண்மை, கால்நடைத் துறைகளில் அமெரிக்க பொருட்களுக்கு இந்திய சந்தையை திறப்பதில் இந்தியா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.அமெரிக்க பால் பொருட்களை அனுமதிப்பதில், இந்திய கலாசார தொடர்பு குறித்த கவலையால் மத்திய அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது.

அமெரிக்காவில் பசுக்களுக்கு அசைவ உணவுகள் வழங்கப்படுகின்றன. பன்றி, மீன், நாய், குதிரை ஆகியவற்றின் கொழுப்பு மற்றும் பாகங்கள் கலந்த உணவுகள் வழங்கப்படுவதால் அவற்றின் பால் அசைவமாக கருதப்படுகிறது.
 

இந்தியாவில், பசுக்கள் கலாசார முக்கியத்துவம் பெற்றுள்ளன. அவற்றுக்கு சுத்த சைவ உணவு முறையே பின்பற்றப்படுகிறது. மேலும், மதரீதியான சடங்குகள், கோவில்களில் பால், நெய் பயன்படுத்தப்படுகிறது. அதனால், அமெரிக்க பால், பால் பொருட்களை அனுமதிக்க இந்தியா மறுக்கிறது.
 

எனவே, அசைவம் சார்ந்த உணவுகள் வழங்கப்படாத பசுக்களிடம் இருந்து பெறப்பட்ட பால், பால் பொருட்கள் என்பதற்கான சான்றிதழை கட்டாயமாக்கினால், இறக்குமதியை அனுமதிக்க பரிசீலிப்பதாக இந்தியா கூறுகிறது.
 

அமெரிக்க பால் பண்ணை பொருட்கள் இறக்குமதியை அனுமதித்தால், உள்நாட்டில் பால், பால் பொருட்கள் விலை குறைய நேரிடும் என்பதாலும், சிறிய விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதாலும் இந்தியா தயங்குகிறது. இது பேச்சு நடத்தக்கூட வாய்ப்பற்ற சிவப்புக் கோடு என்று இந்தியா கூறி வருகிறது.

“அசைவ பால்”   கோடிக்கணக்கான இந்தியக் குடும்பங்களுக்கு, குறிப்பாகச் சைவ உணவு உண்பவர்களுக்குப் பிடிக்கவில்லை. பால் பொருட்களை ஊட்டச்சத்து மற்றும் சடங்கு என்று இந்தியர்களால் பார்க்கப்படுகிறது.  இந்தியாவில் வழிபாட்டின் போது தெய்வத்துக்கு அபிஷேகப் பொருளாகப் பால் பயன்படுத்தப்படுகிறது. இந்து மத யாக வேள்விகளில் நெய் ஊற்றப்படுகிறது. பன்றிக் கொழுப்பு அல்லது கோழி எச்சங்களைப் பசுக்களுக்கு உணவாகக் கொடுக்கும் வழக்கம், உணவு எல்லைகளையும் மத பண்பாட்டு நம்பிக்கைகளின் வரம்புகளை மீறுகிறது.

இப்போது நடைபெற்றுவரும் வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில், அமெரிக்கா தங்கள் நாட்டு வேளாண் பொருட்கள்,பால் பொருட்கள் மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு இந்தியச் சந்தையில் அனுமதி தரவேண்டும் என அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஆனால், இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

அமெரிக்கப் பால் பொருட்களுக்கு இந்தியச் சந்தை திறக்கப்பட்டால், நாட்டின் கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்று sbi வங்கியின் ஆய்வறிக்கை கூறுகிறது. அதாவது, இந்தியாவின் பால் விலை 16 சதவீதம் வீழ்ச்சியடையும் என்றும்,அதனால்,கால்நடை விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்படும் என்றும் எச்சரிக்கப் பட்டுள்ளது.

ஏற்கெனவே, ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளில், நாட்டின் பால் துறையை விட்டுக் கொடுக்காமல் இந்தியா  பாதுகாத்துள்ளது. அமெரிக்காவுடனும் இந்தியா அதே நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை பால்-பொருளாதாரம் மட்டும் அல்ல. அதற்கும் மேல் தேசத்தின் பண்பாடு, வாழ்வியல், நம்பிக்கை மற்றும் புனிதமான பாரம்பரியம் ஆகும்.

Trending News

Latest News

You May Like