தமிழ்நாடு முழுவதும் அமல்..!
கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா கடந்த 29ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி கள்ளச்சாராய விற்பனை செய்வோருக்கு சிறை தண்டனை விதிக்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட இந்த சட்டத்திற்கு ஆளுநர் ஆர். என். ரவியும் ஒப்புதல் அளித்திருந்தார். இந்நிலையில் இச்சட்டம் மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்ததாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.