வெளியானது அயோத்தி ராமரின் புகைப்படம்..!
உபி மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 22ம் தேதி நடக்க உள்ளது. இவ்விழாவில் கலந்து கொள்ள பல்வேறு கட்சி தலைவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு வருகிறது. கோயில் முழுமையாக கட்டி முடிக்கப்படாத நிலையில் மக்களவை தேர்தலை குறிவைத்து அரசியல் ஆதாயத்திற்காக ஆளும் பாஜ அரசு கும்பாபிஷேக விழாவை நடத்துவதால் அதை பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் புறக்கணித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராமர் சிலையின் முதல் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கண்களை மட்டும் துணியால் கட்டியபடி சிலை கர்ப்ப கிரகத்தில் வைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேக தினத்தன்று கண்கள் திறக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும் என அயோத்தி அரக்கட்டளை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.