1. Home
  2. தமிழ்நாடு

என்னை மன்னித்து விடுங்கள் மோடி ஜி - வினோஜ் பி செல்வம் ட்வீட்..!

1

மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் நாடு முழுவதும் 293 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான இண்டியா 233 தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறது. இதன் மூலம் பெரும்பான்மை பலத்துடன் பாஜக மீண்டும் 3-வது முறையாக ஆட்சியில் அமரவுள்ளது.

இது ஒரு புறம் இருக்க, தமிழகத்தில் பாஜகவின் நிலைமை மிக பரிதாபமாக மாறியுள்ளது. தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜகவால் வெற்றி பெற முடியவில்லை. அதேபோல, அதிமுகவும் ஒரு தொகுதியையும் கைப்பற்றவில்லை. திமுக 39 + புதுச்சேரியில் உள்ள 1 தொகுதி என 40 தொகுதிகளையும் கைப்பற்றி இருக்கிறது.

இந்நிலையில், இந்த தோல்வியால் மனம் துவண்டு போயிருக்கிறார் மத்திய சென்னை பாஜக வேட்பாளரான வினோஜ் பி. செல்வம். இதையடுத்து, நேரடியாக பிரதமர் நரேந்திர மோடியிடமே மன்னிப்பு கேட்டிருக்கிறார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "என்னை மன்னித்து விடுங்கள் மோடி ஜி. உங்களை நான் தலை குனிய வைத்துவிட்டேன். ஆனால், இன்னும் நாங்கள் சண்டை போடுவோம். உங்கள் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்வோம். மாற்றம் வெகு தொலைவில் இல்லை. மத்திய சென்னை தொகுதியில் தான் பட்டத்து இளவரசர் உதயநிதியின் தொகுதியும், அமைச்சர் சேகர்பாபுவின் சட்டமன்றத் தொகுதிகளும் இருக்கின்றன. ஆனால், அவர்களையும் மீறி நாம் ஒரு நல்ல வாக்கு சதவீதத்தை பெற்றிருக்கிறோம். இந்த நேரத்தில், மத்திய சென்னையில் பல்வேறு அச்சுறுத்தல்களை மீறி தேர்தல் பணியாற்றிய காரியக்கர்த்தாக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் தொடர்ந்து போராடுவோம்" என அவர் கூறியுள்ளார்.


 

Trending News

Latest News

You May Like