1. Home
  2. தமிழ்நாடு

நான் ரெடி... நீங்க ரெடியா ? இபிஎஸ் உடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் – துணை முதல்வர் உதயநிதி..!

1

சென்னையில் ரூ.15 கோடி மதிப்பில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘மாவட்ட விளையாட்டு வளாகம்’ அமைத்திடவும், மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.6 கோடி மதிப்பில் ‘ஒலிம்பிக் அகாடமி’ தொடங்கவும் சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் காணொளி வாயிலாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

பின்னர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், யாருடைய ஆட்சிக் காலத்தில் மக்கள் நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டன என்பது குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வருக்கு கேள்வி எழுப்பியிருப்பது தொடர்பாக கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “என்னை கூப்பிட்டால் நான் செல்வேன்.” என்றார்.

தொடர்ந்து பல திட்டங்களுக்கு கருணாநிதி பெயர் சூட்டப்படுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டுவது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, “வேறு யார் பெயரை வைக்கலாம்? விமர்சனம் வரத்தான் செய்யும். யார் பெயரை வைக்க வேண்டுமோ, அவர் பெயரைத்தான் வைக்க வேண்டும்.” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

Trending News

Latest News

You May Like