1. Home
  2. தமிழ்நாடு

நான் யாருக்கும் போட்டி இல்லை... சாதாரண ஆள்... யார் வழியிலும் செல்ல மாட்டேன் - நடிகர் ரஜினி பேச்சு..!

1

நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லால் சலாம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில்  நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “காக்கா- கழுகு கதை நான் விஜய்யைக் குறிப்பிட்ட மாதிரி சமூக ஊடகங்களில் பேசிக்கொண்டிருந்தனர். அது வருத்தமாக இருந்தது. விஜய் என் கண் முன்னால் வளர்ந்த பையன்.

“தர்மத்தின் தலைவன் படப்பிடிப்பில் நான் இருக்கும்போது விஜய்க்கு 13-14 வயதிருக்கும்.  அப்போது சந்திரசேகர் எனது பையன் என என்னிடம் அறிமுகப்படுத்தினார். நடிப்பில் ஆர்வம்  இருக்கிறது எனச் சொன்னார். அதன் பிறகு அவர் நடிக்க வந்து படிப்படியாக தனது திறமை, உழைப்பால் இந்த இடத்திற்கு வந்துள்ளார். மறுபடி இப்போது அவர் சமூக சேவைக்கு போவதாக கேள்விப்பட்டேன். இந்த நிலையில் எனக்கு போட்டி என சொல்வது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. விஜய்யே சொன்னதுபோல அவர் படத்துக்கு அவர்தான் போட்டி.  

“விஜய் வந்து எனக்கு போட்டின்னு நினைச்சா அது எனக்கு மரியாதை இல்லை. எனக்கு கெளரவம் இல்ல. விஜய் என்னை போட்டின்னு நினைச்சா அது அவருக்கு மரியாதை இல்லை. இரண்டு பேரின் ரசிகர்கள் இந்த விவாதத்தை தவிர்த்துவிடுங்கள். இது என்னுடைய அன்பான வேண்டுகோள்” எனக் கூறினார். இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

அதேநேரம், நடிகர் ரஜினிகாந்த் 1975 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராட்டு விழா ஒன்றில், “ என் தாடியைப் பார்த்த சிவாஜி சார், என்னிடம் எனக்கு போட்டியா? எனக் கேட்டார். நான் யாருக்கும் போட்டி இல்லை. சாதாரண ஆள். யார் வழியிலும் செல்ல மாட்டேன். என் வழியிலும் யாரையும் வாங்க என அழைக்க மாட்டேன்” எனக் பேசியிருந்த விடியோவும் தற்போது பகிரப்பட்டு வருகிறது.

Trending News

Latest News

You May Like