1. Home
  2. தமிழ்நாடு

நான் அப்பவே சொனேன்... கெஜ்ரிவால் அதை கேட்கவில்லை - அன்னா ஹசாரே..!

Q

டில்லி தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் பின் தங்கியிருப்பதாகவும், பா.ஜ., ஆட்சி அமைக்கும் நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவாலின் தொடக்க கால அரசியல் குருநாதரான சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியதாவது:

ஒரு வேட்பாளரின் நடத்தை, எண்ணங்கள் சுத்தமானதாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் கூறி வந்திருக்கிறேன். வாழ்க்கையானது யாரும் குறை சொல்ல முடியாதபடி இருக்க வேண்டும். தியாகம் இருக்க வேண்டும். இந்த தகுதிகள் தான், ஒரு வாக்காளர் நம் மீது நம்பிக்கை வைப்பதற்கு அடிப்படையானவை.

இதை நான் கெஜ்ரிவாலிடம் கூறி இருக்கிறேன். ஆனால் அவர் அதை கேட்கவில்லை. கடைசியில், மதுவில் தான் அவர் கவனம் செலுத்தினார். ஏன் இந்த பிரச்னை எழுகிறது. அவர் பணத்தின் செல்வாக்குக்கு ஆட்பட்டு விட்டார். இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.

Trending News

Latest News

You May Like