1. Home
  2. தமிழ்நாடு

அடுத்த மாதம் எனக்கு திருமணம்... திருப்பதியில் அறிவித்த நடிகை கீர்த்தி சுரேஷ்..!

Q

தந்தை சுரேஷ்குமார், தாய் மேனகா ஆகியோருடன் திருப்பதிக்கு கீர்த்தி சுரேஷ் வந்தார். அதிகாலை விஐபி தரிசனம் மூலம் ஏழுமலையானை குடும்பத்துடன் வழிபட்டார்.
பின் கோயிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களைப் பெற்று கொண்டனர். தொடர்ந்து அவர்களுக்கு வேத ஆசி வழங்கப்பட்டது.
கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய கீர்த்தி சுரேஷ், “நீண்ட நாட்களுக்குப் பின் ஏழுமலையானை வழிபட்டது மனதுக்கு இதமாக உள்ளது. 
அடுத்த மாதம் எனக்கு திருமணம். திருமணம் கோவாவில் நடைபெறும்.” என வெட்கப்பட்டு கொண்டே கூறினார். அதோடு தற்போது தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘பேபி ஜான்’ படத்தில் நடித்து வருவதாகவும் தெரிவித்தார்.


 


 

Trending News

Latest News

You May Like