"நான் உயிருடன்தான் இருக்கிறேன்" : தொலைபேசியில் கூறிய ராணுவ வீரர்!

"நான் உயிருடன்தான் இருக்கிறேன்" : தொலைபேசியில் கூறிய ராணுவ வீரர்!

நான் உயிருடன்தான் இருக்கிறேன் : தொலைபேசியில் கூறிய ராணுவ வீரர்!
X

சீன தாக்குதலில் இறந்ததாக சந்தேகிக்கப்பட்ட ராணுவ வீரர் தான் உயிருடன் இருப்பதாக தொலைபேசியில் கூறியது ஊர் மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

பீகார் மாநிலம் சரண் மாவட்டம் பார்சா தொகுதியில் உள்ள திக்ரா கிராமத்தை சேர்ந்தவர் ராணுவ வீரர் சுனில் குமார். இவர் கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் இறந்துவிட்டதாக கருதப்பட்டது. ஆனால் தான் உயிரிழக்கவில்லை என சுனில் தன் வீட்டுக்கு தொலைபேசியில் அழைத்து கூறியிருக்கிறார். வேறு சிப்பாய்க்கு பதிலாக இவரது பெயர் தவறாக இடம்பெற்றுவிட்டதாக தெரிகிறது. ஆகவே இவர் உயிர்த்தியாகம் செய்துவிட்டதாக தவறான செய்தி வெளியாகிவிட்டது. இந்தத் தகவலை சுனிலின் இராணுவப் பிரிவு, அவரது சகோதரர் அனிலுக்குத் தெரிவித்துள்ளது. இதனால் சுனிலின் குடும்பத்தினரும், கிராம மக்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it