1. Home
  2. தமிழ்நாடு

சிம் அட்டைகளை சட்டவிரோதமாக பயன்படுத்தியது அம்பலம்..!

1

சென்னை கிரீம்ஸ்ரோடு முருகேசன் நாயகர் வணிக வளாகத்தில் ‘ஆப்செட் பிசினஸ் சொல்யூஷன்’ என்ற பெயரில் தனியார் கால் சென்டர் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தை 5 ஆண்டுகளாக கன்னிராஜ் என்பவர் நடத்தி வருகிறார். சுமார் 800 பேர் இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்கள்.

முன்னணி தனியார் வங்கிகளில் கடன் அட்டை, தனிநபர் கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்களை இந்த நிறுவனத்தினர் தொடர்புகொண்டு கடன்களைத் திருப்பி செலுத்தும்படி கூறுவார்கள்.

மத்திய அரசின் விதிமுறைகளை மீறி கைப்பேசி சிம் அட்டைகளை ‘சிம்டூல் பாக்சில்’ பயன்படுத்தி லாபம் பெறும் நோக்கில் இந்த நிறுவனம் செயல்படுவதாக வோடபோன் நிறுவன அதிகாரி பிரபு புகார் செய்ததையடுத்து மத்திய உளவுப் பிரிவு டி.எஸ்.பி. பவன், தொலைத்தொடர்பு அதிகாரிகள் குழுவினர் இந்த நிறுவனத்தில் சோதனை நடத்தினார்கள்.

6 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்தச் சோதனையின் போது சிம் அட்டைகளை சட்ட விரோதமாகப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து நுங்கம்பாக்கம் காவல்துறை உதவி ஆணையர் அருணுக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் விரைந்து சென்று சட்ட விரோதமாகப் பயன்படுத்திய சிம் டூல் பாக்ஸ்-83, மானிட்டர்-1, சிபியு-1 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கால் சென்டர் உரிமையாளர் கன்னிராஜ், பொறுப்பாளர் உமாபதி ஆகியோரை காணவில்லை என்றும் அவர்களைத்தேடி வருவதாகவும் காவல்துறையினர் கூறினார்கள்.

Trending News

Latest News

You May Like