ரசிகர்களின் இதயத்தை மேலும் கனமாக்கிய இளையராஜாவின் பதிவு!

இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த இவர் காலமாகியுள்ளது ரசிகர்களையும் திரையுலகினரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பவதாரிணியின் உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைபுரத்துக்கு எடுத்து செல்லப்படுகிறது.
பவதாரணியின் சகோதரர்களான கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, வெங்கட்பிரபு, பிரேம்ஜி என சொந்தங்கள் அனைவரும் கனத்த இதயத்துடனும் கண்ணீருடனும் வரும் காட்சிகள் பார்ப்பவர்களை உருக செய்தன. இதுபோன்ற சூழ்நிலையில் தான் இளையராஜா தன் மகள் பவதாரிணியுடன் சிறுவயதில் இசை கேட்டுக்கொண்டு அவரிடம் பாடல்களை படித்துக் காண்பிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, 'அன்பு மகளே' என கண்ணீருடன் ஒரு பதிவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார். இது பார்த்தவர்களின் இதயத்தை மேலும் கலங்கடிக்க செய்யும் விதமாக அமைந்துள்ளது. இளையராஜா குடும்பத்திற்கு ரசிகர்களும் திரையுலகினரும் தங்கள் ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.
அன்பு மகளே... pic.twitter.com/GgtnKGyvQ1
— Ilaiyaraaja (@ilaiyaraaja) January 26, 2024