கூலி டீசரில் இருந்து அந்த பாடலை நீக்க வேண்டும் - ரஜினி டீசருக்கு ஆப்பு வைத்த இளையராஜா..!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்த டீசரில் அனுமதியின்றி தன்னுடைய பாடலை பயன்படுத்தியதாக இளையராஜா சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், “கூலி பட டீசரில் இடம்பெற்றுள்ள ‘வா வா பக்கம் வா’ என்ற பாடலின் இசைக்கு உரிய அனுமதி வாங்க வேண்டும், இல்லையெனில் டீசரில் இருந்து அந்த பாடலை நீக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
நோட்டீஸ் வந்திருப்பது தொடர்பாக லோகேஷ் கனகராஜோ, சன் பிக்சர்ஸ் நிறுவனமோ, அனிருத்தோ இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.
இசை காப்புரிமை விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கிறார் இளையராஜா. இது திரையுலகில் உள்ள பலருக்கு பிடிக்கவில்லை. காப்புரிமை விவகாரத்தால் இளையராஜாவை ரசிகர்களும் விமர்சிக்கிறார்கள். இசையமைக்க சம்பளம் வாங்கியிருக்கிறீர்கள். அப்படி இருக்கும்போது அந்த இசை உங்களுக்கு மட்டும் சொந்தம் என்று சொல்வது சரியில்லை என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.