1. Home
  2. தமிழ்நாடு

இளையராஜா - முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு..! விழா நடத்தும் முதல்வர் ஸ்டாலின்..!

Q

இசையமைப்பாளர் இளையராஜா இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார்.

முன்னதாக இளையராஜா லண்டன் சென்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி திரும்பினார். இந்த சிம்பொனியை 13 நாடுகளில் அடுத்தடுத்து அரங்கேற்ற உள்ளதாக சென்னை விமான நிலையத்தில் சமீபத்தில் அறிவித்தார்.

இளையராஜா லண்டன் செல்வதற்கு முன்பாக முதல்வர் ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலினை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இளையராஜாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

லண்டன் அரங்கேற்றம் முடிந்து திரும்பும் போது சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இளையராஜாவை வரவேற்றனர் 

இந்நிலையில் இன்று மாலை இசையமைப்பாளர் இளையராஜா ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு சென்றார். தமிழக அரசு சார்பில் தனக்கு வரவேற்பு அளித்ததற்கு நன்றி தெரிவித்தார். லண்டன் சிம்பொனி அரங்கேற்றம், பயணம் அனுபவம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் விவரித்தார்.

இளையராஜா வந்து சந்தித்து சென்றது குறித்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

அதில், “இலண்டன் மாநகரில் சிம்பொனி சாதனை படைத்துத் திரும்பியுள்ள இசைஞானி இளையராஜா அவர்கள், அவரது பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார்.

அவரது அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்!

ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும்!” என்று தெரிவித்துள்ளார்

Trending News

Latest News

You May Like