1. Home
  2. தமிழ்நாடு

இளையராஜா ஒரு இசைக்கடவுள். கடவுளுக்குக் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்ற அவசியமே இல்லை - நடிகை கஸ்தூரி!

Q

சென்னையில் நடிகை கஸ்தூரி  நிருபர்களிடம்  கூறியதாவது,தமிழகத்தில் ஒரு புதிய காற்று வீச வேண்டும் என்றால் எல்லோரும் ஒருமித்த கருத்துடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்தால் என்னைப் பொறுத்த வரைக்கும் ஒரு நல்ல முன்னேற்பாடாக இருக்கும் என்று நினைக்கிறேன். இதையே எல்லாரும் நினைக்க வேண்டும் என அவசியமில்லை. ஆனால், இதை நம்புகிறேன். கடந்த ஒரு மாதமாக எனது வாழ்க்கை ரொம்ப மாறிவிட்டது.
இளையராஜா ஒரு இசைக்கடவுள். கடவுளுக்குக் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்ற அவசியமே இல்லை. அவரைக் கோவிலின் உள்ளே விட வில்லை என்ற பிரசாரத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். எத்தனை காலம் தான் இது போன்ற பிரசாரத்தை முன்வைத்து ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?
கருவறைக்குள் எந்தச் சாதியினரும் அவர் யாராக இருந்தாலும் உள்ளே செல்ல முடியாது. அர்ச்சகர்கள் மட்டுமே போக முடியும். தமிழகத்தில் எந்தச் சாதியினரும் அர்ச்சகராக முடியும். அவ்வளவு தான் விஷயம். அவருக்கு(இளையராஜா) மரியாதை பண்ண வேண்டும், அங்கேயே நில்லுங்க என்று சொன்னார்கள். அவர் நிற்கிறார். இது தான் நடந்தது. ஆனால், இங்கே நில்லுங்க என்று சொல்லிட்டாங்க என்பது தான் பிரச்னையே.
இதைத் திரித்து, பேசும் இந்த வன்மபோக்கை கண்டித்து நவ.3ம் தேதியே நான் பேசினேன். இதையே தான் இப்போதும் பேசுகிறேன்.

Trending News

Latest News

You May Like