மகளின் ஆசையை நிறைவேற்றிய இளையராஜா...பவதாரிணி பெயரில் ஆர்கெஸ்ட்ரா குழு..!

பவதாரிணி மறைந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அவருடைய பிறந்தநாள் மற்றும் திதி இன்று ஒரே நாளில் வந்துள்ளது. அதனால், பவதாரிணியின் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அப்போது பலர் உருக்கமாக பவதாரிணியின் நினைவுகளை பிகிர்ந்துக் கொண்டனர்.
இந்நிலையில், மகளின் ஆசையை நிறைவேற்றும் வகையில் இளையராஜா பவதாரிணியின் பெயரில் ஆர்கெஸ்ட்ரா குழு தொடங்க உள்ளதாக அறவித்துள்ளார். அதாவது, 15 வயதுக்குட்பட்ட சிறுமிகள் அடங்கிய ஆர்கெஸ்ட்ரா குழுவைத் தொடங்க இருப்பதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார்.
பவதாரிணியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய அவர், " பவதாவின் பிறந்தநாளும், திதியும் ஒரே நாளில் வந்துள்ளது. இது வேறு எங்கும் நடந்தது இல்லை" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.