சீன பொருட்கள் புறக்கணிப்பு செய்தால் , அவர்களின் பொருளாதாரம் பாதிக்காது !! ப.சிதம்பரம்
லடாக் எல்லையில் கடந்த திங்கட்கிழமை இந்திய- சீன ராணுவத்துக்கு இடையே நடந்த கடும் மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்தியா தந்த பதிலடியில் சீன தரப்பில் 35 வீரர்கள் இறந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், இதுவரை சீனா தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இந்த மோதலால் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது. இதை தணிப்பதற்காக, இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் மட்டத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான கலாச்சார, பொருளாதார உறவு பல நூற்றாண்டுகளாக நீடிக்கிறது. ஆனால், லடாக் எல்லைப் பிரச்சினை தலை தூக்கத் தொடங்கியதில் இருந்து, ‘சீனப் பொருட்களை பகிஷ்கரிப்போம்’ என்ற குரல் ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக பேசிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ; இந்தியா முடிந்த அளவுக்குச் சுயச்சார்புடன் நமது தயாரிப்புகளையே வாங்க வேண்டும். ஆனால், அதற்காகச் சர்வதேச சந்தைச் சங்கிலியிலிருந்து நாம் விலகி விட முடியாது.
மற்ற நாடுகளுடன் வர்த்தகம் செய்தாக வேண்டும். நாட்டின் பாதுகாப்பு போன்ற மிகவும் சிக்கலான பிரச்சனைகளின் போது, சீனப் பொருட்களைப் புறக்கணிப்பது என்ற சாதாரண விஷயங்களை முன்னெடுக்கக் கூடாது.
உலகம் முழுவதும் சீனா மேற்கொள்ளும் மொத்த வர்த்தகத்தில் இந்தியா வாங்குவது என்பது சிறிய அளவாக இருக்கும். அதைப் புறக்கணிப்பதால் சீனாவின் பொருளாதாரம் பாதிக்காது.
இந்தியாவின் பாதுகாப்பு போன்ற மிகப் பெரிய விஷயங்களைப் பற்றி நாம் விவாதிக்கும்போது புறக்கணிப்பு போன்ற பிரச்சினைகளை நாம் கொண்டு வரக்கூடாது. இந்தியா இயன்றளவு சுயசார்பாக மாற வேண்டும், அதற்காக பிற நாடுகளிலிடமிருந்து விலகிச்செல்லகூடாது. உலகளாவிய விநியோக சங்கிலியில் இந்தியா தொடர வேண்டும், சீன பொருட்களை புறக்கணிக்கக்கூடாது எனவும் கூறியுள்ளார்.
Newstm.in