இன்று அம்மனை இந்த முறையில் வழிபட்டால் வேண்டிய வரம் கிடைக்கும்..!
பலரும் மற்ற நாட்களில் தெய்வ வழிபாட்டை செய்கிறார்களோ இல்லையோ வெள்ளிக்கிழமையில் மறவாமல் தெய்வ வழிபாட்டை செய்வார்கள். அதிலும் தெய்வ வழிபாட்டிற்கே உரிய ஆடி மாதத்தில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாகவே திகழ்கிறது.
பலரும் வெள்ளிக்கிழமை அன்று வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய சுவாமி படங்களை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து மலர்களால் அலங்காரம் செய்து தீபம் ஏற்றும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். அதேபோல் வீடு முழுவதும் சாம்பிராணி தூபத்தையும் போடும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். இந்த வழிபாட்டை காலையிலும் செய்வார்கள். சில பேர் மாலையிடும் செய்வார்கள். ஒரு சிலர் இரண்டு வேளையிலும் செய்வார்கள். இப்படி செய்வதோடு சேர்த்து அருகில் இருக்கக்கூடிய அம்மன் ஆலயத்திற்கு சென்று அம்மனை வழிபாடு செய்ய வேண்டும்.
அவ்வாறு வழிபாடு செய்யும் பொழுது அம்மனுக்கு முன்பாக நாமே நம் கைப்பட தயார் செய்த இரண்டு மாவிளக்குகளை வைத்து நெய் ஊற்றி பஞ்சுத் திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு ஒரு கொத்து வேப்பிலை, ஒரு எலுமிச்சம் பழத்தை அம்மனின் பாதத்தில் வைத்து தரும் படி அங்கு இருக்க கூடிய ஐயரிடம் கூற வேண்டும். இவ்வாறு வைக்கும் பொழுது தங்களின் பெயரைக் கூறியும் தங்கள் குடும்பத்தில் இருப்பவர்களின் பெயரை கூறியும் அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த எலுமிச்சம் பழம் அப்படியே அம்மனின் பாதத்தில் சிறிது நேரம் இருக்கட்டும்.
அம்மனை 11 முறை வலம் வந்து மனதார என்ன வரம் வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த வரத்தை கேட்டுவிட்டு அம்மனின் பாதத்தில் இருக்கக்கூடிய வேப்பிலை, எலுமிச்சம் பழத்தையும் வாங்க வேண்டும். அவ்வாறு வாங்கும் பொழுது பெண்கள் தங்களுடைய முந்தானியில் வாங்குவது என்பது வேண்டிய வரம் கிடைத்ததற்கு சமமாகவே கருதப்படுகிறது. மாவிளக்கு தீபம் குளிர்ந்த பிறகு அந்த மாவிளக்கை ஆலயத்திற்கு வரக்கூடியவர்களுக்கு பிரசாதமாகவும், பசு மாட்டிற்கும் தானமாகவும் தரலாம். ஆலயத்தில் இருந்து வாங்கி வந்த வேப்பிலை மற்றும் எலுமிச்சம் பழத்தை வீட்டு பூஜை அறையிலோ அல்லது வீட்டின் நிலை வாசலிலோ வைக்கலாம்.
மிகவும் எளிமையான இந்த வழிபாட்டை முழு நம்பிக்கையோடு அம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளிக்கிழமை செய்பவர்களுக்கு அம்மனின் அருளால் அவர்கள் கேட்ட வரம் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
.png)