1. Home
  2. தமிழ்நாடு

எங்களுக்கு ஆதரவு கொடுத்தால் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவரை முதல்வர் ஆக்குவோம் - அன்புமணி ராமதாஸ்..!

1

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சமீபத்தில், ”எந்தச் சூழலிலும், எந்தக் காலத்திலும் ஒரு தலித், ஒரு மாநிலத்தின் முதல்வராக முடியாது” எனப் பேசியிருந்தார். இது தொடர்பாகப் பாமக தலைவர் அன்புமணியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவர் கூறியதாவது: ஒட்டுமொத்த பட்டியலின சமூகத்தினர் எங்களுக்கு ஆதரவு கொடுத்தால், தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வர் ஆக்குவோம்.

இது வெறும்பேச்சு அல்ல. எங்களுக்கு முதன்முதலில் மத்திய அமைச்சர் பதவி கிடைத்தவுடன் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்குதான் அந்தப் பதவியைக் கொடுத்தோம். பட்டியலின மக்களுக்கு அதிகமாகச் செய்தது பாமக தான். நாங்கள் 1998ல் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரை மத்திய அமைச்சராக்கினோம். ஆனால் திமுக 1999ல் தான் ஆ.ராசாவை மத்திய அமைச்சராக்கியது. இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like