1. Home
  2. தமிழ்நாடு

தினமும் 100 ரூபாய் சேமித்தால் 16 லட்சம் கிடைக்கும்..!

1

10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் இந்தக் கணக்கைத் தொடங்கலாம். ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும். ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ஆளுக்கு ஒரு கணக்கு இருக்கலாம்.அருகில் உள்ள போஸ்ட் ஆபிசுக்குச் சென்று இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கலாம்.

இத்திட்டத்தில் டெபாசிட் செய்து பெறப்படும் வட்டிக்கு வரி கிடையாது. சுகன்யா சம்ரித்தி கணக்கில் ஒரு வருடத்தில் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் டெபாசிட் செய்யலாம். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 250 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். ஒரே நேரத்தில் ரூ.1.5 லட்சம் இல்லாத பெற்றோர்கள், ஒரு மாதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் சிறிய தொகையை டெபாசிட் செய்யலாம்.


ஏப்ரல் 1, 2023 முதல் சுகன்யா சம்ரித்தி கணக்கில் டெபாசிட் செய்வதற்கான வட்டி விகிதம் 8% ஆகும். சுகன்யா சம்ரித்தி திட்டத்தின் வட்டி விகிதம் காலாண்டு அடிப்படையில் மாற்றி அமைக்கப்படுகிறது. அரசாங்கத் திட்டங்களில் அதிக வட்டி விகிதம் கிடைக்கும் திட்டங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

சுகன்யா சம்ரித்தி திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கி  அதிகபட்ச லாபம் பெற ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும். இந்த முதலீட்டுக்கு 8% வட்டி விகிதம் வட்டி கிடைக்கும். இதன்படி, திட்டம் முதிர்ச்சி அடையும் காலத்தில் சுமார் ரூ. 67 லட்சம் முதிர்வு தொகை கிடைக்கும்.


இந்தக் கணக்கில் டெபாசிட் செய்ய ஒரு நாளைக்கு வெறும் 100 ரூபாய் சேமித்தால், வருடம் தோறும் ரூ. 36,000 முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டுக்கு முதிர்ச்சி காலத்தில் 8% வட்டியுடன் சேர்த்து சுமார் ரூ. 16 லட்சம் கிடைக்கும். ஒரு நாளைக்கு 50 ரூபாய் சேமித்தால், ஆண்டுக்கு ரூ.18,000 டெபாசிட் செய்யலாம். அப்போது, முதிர்வுத் தொகை ரூ. 8 லட்சம் கிடைக்கும்.

Trending News

Latest News

You May Like