1. Home
  2. தமிழ்நாடு

ரூ.75-க்கு ரீசார்ஜ் செய்தால்... 23 நாள்கள் வேலிடிட்டி..!

1

பொதுத்துறைத் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் மலிவான திட்டங்களை அதிகளவில் அறிமுகம் செய்ததையடுத்து, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் குறைந்த விலையுள்ள திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த திட்டத்திற்கு ரூ.75 செலவு செய்து ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்த திட்டத்தில் செல்லுபடியாகும் காலம் 23 நாள்களாக இருக்கிறது. இதனால் தினசரி கணக்கில், சுமார் 3 ரூபாய் செலவு செய்தால், இந்த திட்டத்தின் பயன்களைப் பெறலாம்.இதில் அனைத்து அழைப்புகளும் இலவசம் என்பது சிறப்பான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

இதனுடன் 2.5 ஜிபி இன்டர்நெட் டேட்டா கிடைக்கும். இதை நாள் ஒன்றுக்கு 100 மெகாபைட் (MB) எனும் கணக்கில் பயன்படுத்தலாம். தினசரி வரம்பு தீர்ந்து போனால், கூடுதலாக 200 MB ஒருமுறை வழங்கப்படுகிறது.

இவை மட்டுமில்லாமல், ஜியோ சினிமா, ஜியோ டிவி, ஜியோ கிளவுட் போன்ற சேவைகளை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது ஜியோ போன் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே 

ஜூலை 2024 அன்று வெளியான தரவுகளின்படி, ரிலையன்ஸ் ஜியோ 7.50 லட்சம் வாடிக்கையாளர்களையும், பார்தி ஏர்டெல் 16.9 லட்சம் வாடிக்கையாளர்களையும், வோடபோன் ஐடியா 14.1 லட்சம் வாடிக்கையாளர்களையும் சமீபத்தில் இழந்துள்ளது. இதே நேரத்தில், அரசின் பி.எஸ்.என்.எல், 29.3 லட்சம் வாடிக்கையாளர்களைப் புதிதாகப் பெற்றுள்ளது.

Trending News

Latest News

You May Like