1. Home
  2. தமிழ்நாடு

வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது துளசியை வணங்கிவிட்டுச் சென்றால்...

1

எந்த இடத்தில் துளசிச் செடி வளர்ந்திருக்கிறதோ அங்கே மும்மூர்த்திகளுடன் சகல தேவதைகளும் வாசம் செய்கிறார்கள். சூரியனைக் கண்டதும் இருள் மறைவது போல் துளசியின் காற்றுப்பட்டாலே பாவங்களும் நோய்களும் விலகி விடும். துளசி இலையைத் தெய்வப் பிரசாதமாக உண்பவர்க்கு சகல பாவங்களும்  தொலையும்.

யாருடைய வீட்டில் துளசிசெடிகள் நிறைய இருக்கிறதோ அந்த இடம் புண்ணியமான திருத்தலம். அங்கு அகால மரணம், வியாதி முதலியன ஏற்படாது. துளசிச் செடிகளைத் திருமாலின் அம்சமாக மதித்துப் பூஜை செய்ய வேண்டும். துளசி தளத்தால் திருமாலை அர்ச்சனை செய்து பூஜிப்பவருக்கு மறுபிறவி கிடையாது.

துளசியை பூஜை செய்ததின் பயனாக சீதைக்கு ராமபிரான் கணவராக கிடைத்தார் என்று துளசி ராமாயணம் கூறுகிறது.

( 1 ). ஒவ்வோர் வீட்டிலும், துளசி செடி அவசியம் இருக்கனும். சிறிது கருப்பாக இருக்கும் கிருஷ்ண துளசி எனில் இரட்டைச் செடியாகத்தான் வளர்க்க வேண்டும்.

( 2 ). வீட்டின் முன்னே,அல்லது முற்றத்திலோ வளர்க்கவும்.

( 3). நீரை கடவுள் பெயர் சொல்லி, தெளித்து விட்டு, வேரில் அளவோடு ஊற்றவும்.

( 4 ). வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது, துளசியை வணங்கிவிட்டுச் சென்றால் எந்த சகுன பாதிப்பும் இல்லை!

( 5 ) .வீட்டிற்கு திரும்பியபின், கை கால் கழுவிய பின், துளசியை வணங்கினால் தீய சக்திகளின் தொல்லையில்லை

( 6 ). பெண்கள் திருமணமாகிப் புகுந்த வீட்டிற்கு செல்லும் போது துளசியிடம் விடை பெற வேண்டும். பிறந்த வீட்டிற்கு வரும் போதெல்லாம் நீருற்றி வழிபட வேண்டும்.

தீட்டு, தலைமுடி, எச்சில், கழிவுநீர் துளசித் தாய் மேல் படக்கூடாது. 

Trending News

Latest News

You May Like