1. Home
  2. தமிழ்நாடு

இனி சிறுநீர் கழித்தால் கேமராவுடன் ஒலி எழுப்பும்..!

1

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகத்தின் எல்லா பகுதிகளுக்கும் பேருந்தகள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன. 24 மணி நேரமும் பயணிகள் நடமாட்டத்துடன் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம். இந்நிலையில் இந்த பேருந்து நிலையத்தின் பின்பகுதியில் தான் ஆம்னி பஸ் நிலையமும் செயல்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையத்தில் கட்டண கழிவறை, குளியலறை வசதிகள் இருக்கின்றன.

அரசு பேருந்துகள் செல்லும் பகுதியை பொறுத்தவரை மதுரை செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தின் அருகில் மட்டும் இலவச கழிவறை செயல்பட்டு வருகிறது. மற்ற இடங்களில் இலவச கழிவறைகள் இல்லை. இதனால் பேருந்து நிலையத்தில் பொதுவெளியில் ஆட்கள் சிறுநீர் கழிப்பது அதிகரித்தது. இதை தடுக்க பல முயற்சிகள் மாநகராட்சி தரப்பில் செய்யப்பட்டன. ஆனாலும் சிறுநீர் கழித்து வந்தனர். இதனால் பேருந்து நிலையத்துக்குள் நுழைந்தாலே துர்நாற்றம் வீசுவது தொடர்ந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க தஞ்சாவூர் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதற்காக முதல்கட்டமாக பஸ் நிலையத்தில் பொதுவெளியில் சிறுநீர் கழிப்பதை தடுக்க தஞ்சாவூர் மாநகராட்சி புதிய கருவியை பொருத்தி இருக்கிறது. திருச்சி செல்லும் பேருந்துகள் நிற்கும் பகுதியில் சிறுநீர் கழிப்பதை தடுக்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராவுடன் இந்த சென்சார் கருவி பொருத்தப்பட்டிருக்கிறது.

இந்த கேமரா மற்றும் சென்சார் கருவி எப்படி வேலை செய்யும் என்றால், 50 அடி தூரத்திற்கு துல்லியமாக ஆட்களை அடையாளம் கண்டுவிடும். யாராவது சிறுநீர் கழிக்கும் நோக்கத்தில் இந்த கோடு அருகே வந்தால் அலாரம் ஒலிக்க தொடங்கி விடும். சைரன் போன்ற சத்தத்துடன் விளக்குகளும் எரியத்தொடங்கும். இதற்காக இரும்பு தகரத்தில் இரவு நேரத்தில் சைரன் போன்ற விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பதுடன், இரும்பு தகரத்தில் இருந்து சில அடி தூரத்தில் கோடும் வரையப்பட்டுள்ளது.

சிறுநீர் கழிப்பதை தடுக்கவே இந்த அலாரம் ஒலிக்கும் என்பதால் யாரும் சிறுநீர் கழிக்க விரும்பமாட்டார்கள் என்று நம்பப்படுகிறது. யாராவது சிறுநீர் கழித்தால் தொடர்ந்து ஒலி எழுப்பிக்கொண்டே இருக்கும். 5 வினாடிகள் முதல் 10 வினாடிகள் வரை இந்த அலாரம் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்கிறார்கள்
 

Trending News

Latest News

You May Like