1. Home
  2. தமிழ்நாடு

இந்த தவறை செய்தால் மகளிர் உரிமை தொகை திட்டம் பணம் கிடைக்காமல் போகலாம்..!

1

அடுத்த சில நாட்களில் மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் தொடர்பான அறிவிப்பு வரலாம் என்கிறார்கள். இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. பின்வரும் பிரிவை சேர்ந்தவர்களுக்கு இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

1. அரசு ஊழியர் அல்லாத கணவர்களின் மனைவிகளுக்கு பொருந்தும்.

2. புதிதாக திருமணம் ஆகி ரேஷன் கார்டு பெற்றவர்கள். அரசு ஊழியர் அல்லாத பட்சத்தில்

3. கூட்டு குடும்பத்தில் இருந்து பிரிந்து புதிய ரேஷன் கார்டு பெற்றவர்கள். அரசு ஊழியர் அல்லாத பட்சத்தில்

4. தவறான காரணங்களால் பெயர் விடுபட்டவர்கள்.

5. அரசு அல்லாத சில கூட்டுறவு ஊழியர்களின் மனைவிகளுக்கு பணம் வழங்கப்படலாம்.

2 மாதங்களில் தமிழ்நாட்டில் அனைத்து தகுதி உள்ள மகளிருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனால் சில வாரங்களில் இதற்கான வேலைகள் துவங்கும்.. புதிய விண்ணப்பங்களை ஏற்கப்படும், ஆவணங்கள் சரிபார்க்கும் பணிகள் தொடங்கப்படலாம் என்கிறார்கள்.

ஏற்கனவே முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள், கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் ஆகியோர்களுக்கு எல்லாம் இந்த திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் ஏற்கனவே பென்ஷன் பெறக்கூடிய பெண்கள், அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெற கூடிய பெண்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இவர்களுக்கு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் போது அதற்கான அறிவிப்புகள் வரலாம் என்று கூறப்படுகிறது .



மகளிர் உரிமை தொகை திட்டம் 2 மாதத்தில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த திட்டத்தில் பின்வரும் தவறுகளை செய்தால் பணம் கிடைக்காமல் போகலாம்.

1. ஒரு ரேஷன் கார்டில் உள்ள ஒரு பெண்ணுக்கு மட்டுமே பணம் கிடைக்கும். இரண்டாவது பெண்ணுக்கு பணம் தரப்பட்டது.

2. இதற்காக இரண்டாவது பெண் தனியாக ரேஷன் வாங்கினாலும் கிடைக்காது. ஏனென்றால் ஒரே வீட்டில் இருந்தால் சோதனையின் போது பணம் தர கூடாது என்று முடிவு எடுக்கப்படும்.

3. கள ஆய்வில் ஒரே வீட்டில் இரண்டு ரேஷன் இருந்தால் அதில் இரண்டாவது ரேஷன் நீக்கப்படும்.

4. அரசு பென்ஷன் பெற்றால் அவர்களுக்கு கண்டிப்பாக பணம் கிடைக்காது.

5. அரசின் வேறு வகையான வருமானம் பெற்றாலும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது.

Trending News

Latest News

You May Like