1. Home
  2. தமிழ்நாடு

இதை மட்டும் செஞ்சா... என் மக்களோட பொருளாதாரம் எங்கேயோ போயிடும் - தங்கர் பச்சான்..!

1

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக சார்பில் கடலூர் தொகுதியில் போட்டியிடுகிறார் திரைப்பட இயக்குநர், நடிகர், எழுத்தாளர் என பல முகங்களை கொண்டவர் தங்கர் பச்சான்.

இந்நிலையில் சமூக வலைதள பக்கத்தில் மீண்டும் ஆக்ட்டிவ் ஆகியுள்ளார் தங்கர் பச்சான், தனது முந்திரி தோட்டத்தில் இருந்தப்படி, அதன் முக்கியத்துவத்தையும் அதனால் மக்களின் பொருளாதாரத்தையும் உயர்த்துவது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது, "இந்தியாவிலேயே அதிக முந்திரி விளைச்சல் கொண்ட மாவட்டம் இந்த கடலூர் மாவட்டம்தான்.

இந்த முந்திரி பழத்தி, எல்லா விட்டமினும் உள்ளது. இது ஒரு மருந்துப் பொருள். நீர்சத்து, நார் சத்து என அனைத்தும் உள்ளன. நம் மக்கள் இந்த முந்திரி பழங்களை குப்பையில் போடுவார்கள். ஆடு மாடு என கால் நடைகள் சாப்பிடும், பன்றிகள் சாப்பிடும், குப்பையிலேயே கிடந்து மக்கி போய்விடும்.

உலக நாடுகளில் இந்த முந்திரி பழம் மருந்தாகவும் பானமாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இங்குள்ள மக்களுக்கு அதைப்பற்றியே அறிவே இல்லை. கடலூர் மாவட்டம் பொருளாதாரத்தில் கடைசியாக உள்ளது. இந்த மாவட்டத்தில் வறுமை நிறைந்துள்ளது. அதிக குடிசை பகுதி நிறைந்தது கடலூர் மாவட்டம்.இந்த இடத்தில் ஒரு முந்திரி பழத்திற்கான தொழிற்சாலை வைக்கக்கூடாதா? அரசியல் கட்சிகள் அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு சாராய தொழிற்சாலை அமைக்க அனுமதித்ததால் அதை வாங்கி குடித்து எங்கள் ஊரில் 120 பெண்கள் கணவரை இழந்துள்ளனர். அதை சொல்லிதான் இங்கு அமைக்கப்பட இருந்த டாஸ்மாக் கடையை நிறுத்தினேன்.

அதன்பிறகுதான் அரசும் டாஸ்மாக் கடையை நிறுத்தியது. முந்திரி பழத்தை பானமாக பயன்படுத்தும்த தொழிற்சாலை மட்டும் இங்கு அமைக்கப்பட்டால், என் மக்களின் பொருளாதாரம் எங்கேயோ சென்றுவிடும் என கூறினார்.


 

Trending News

Latest News

You May Like