1. Home
  2. தமிழ்நாடு

கணவனும் மனைவியும் சேர்ந்து இந்த திட்டத்தில் முதலீடு செய்து வந்தால் நீங்களும் ஆகலாம் கோடீஸ்வரர்..!

1

உங்களின் மனைவியின் உதவியுடன் நீங்களும் முதலீடு செய்து வந்தால் 20 ஆண்டுகளில் நீங்கள் கோடீஸ்வரர் ஆகலாம். 

பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund) என்பது மிகவும் பிரபலமான முதலீட்டுத் திட்டங்களில் ஒன்றாரும். இந்த திட்டத்தில் நீங்கள் நீண்ட காலத்திற்கு பணத்தையும் சேமிக்க முடியும், வருமான வரியையும் சேமிக்க முடியும். விதியின் படி ஒருவரின் பெயரில் ஒரு PPF கணக்குதான் இருக்க முடியும்.  

அதேபோல், PPF கணக்கில் கூட்டுக் கணக்கு என்பதில்லை. கணவன் - மனைவி இருவரும் சம்பாதிக்கிறீர்கள் என்றால் தனித்தனியே ஒரு PPF கணக்கை வைத்துக்கொள்ளலாம்.  

PPF திட்டத்தின், ஒரு கணக்கில் நீங்கள் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சத்தை டெபாசிட் செய்யலாம். அதன்படி கணவன் - மனைவி இருவரும் தலா ரூ.1.50 லட்சத்தை டெபாசிட் செய்யலாம். அதாவது, மாதத்திற்கு ரூ.12,500 டெபாசிட் செய்ய வேண்டும்.  

இந்த திட்டம் முதிர்ச்சி அடைய 15 ஆண்டுகள் ஆகும். மேலும், நீங்கள் 5 ஆண்டுகள் திட்டத்தை நீட்டித்துக்கொள்ளலாம். இதனால், கணவன் - மனைவி இருவரும் 20 ஆண்டுகள் முதலீடு செய்யலாம். இதன்படி, கணவன் - மனைவி இருவரும் தலா ரூ.30 லட்சத்தை முதலீடு செய்திருப்பீர்கள். தற்போது இந்த திட்டத்தில் 7.1% வட்டி வழங்கப்படுகிறது. இதனால், இருவரின் கணக்கில் ரூ.36,58,288 வட்டியாக வரும். மொத்தமாக ஒரு கணக்கில் ரூ. 66,58,288 இருக்கும்.    

அதாவது, கணவன் மற்றும் மனைவி கணக்கில் ரூ. 66,58,288 + ரூ.66,58,288 என மொத்தம் ரூ.1 கோடியே 33 லட்சத்து 16 ஆயிரத்து 576 ஆகும். அதாவது 20 ஆண்டுகளில் நீங்கள் கோடீஸ்வரர் ஆகிவிடலாம். PPF திட்டம் EEE வகையில் இருப்பதால் முதலீடு, வட்டி மற்றும் முதிர்ச்சி தொகை என எதற்கும் வரி கிடையாது.  

இதில் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய ஒன்றும் உள்ளது. 15 ஆண்டுகள் திட்டம் முதிர்ச்சி அடைந்து பின்னர் 5 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் என்றால் நீங்கள் ஓராண்டுக்கு முன்னரே PPF கணக்கு வைத்துள்ள வங்கிகள் அல்லது அஞ்சல் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அப்படி செய்தால்தான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீங்கள் அதில் முதலீடு செய்ய முடியும்.

Trending News

Latest News

You May Like