இந்தியை கற்றுத்தான் ஆக வேண்டும் என்றால் இந்தியா பல நாடுகளாக மாறும் - சீமான் ஆவேசம்..!

திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த நாம் தமிழர் சீமான் பேசியதாவது,
" எந்த மாநிலத்திற்கும் அதன் கொள்கை மொழி என்பது தாய்மொழியாக மட்டுமே இருக்க முடியும். நாட்டில் ஒரு குறிப்பிட்ட மொழியை கற்றுத்தான் ஆக வேண்டும் என்றால் பல தனி நாடுகள் உருவாகும்.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லை என்பதற்காக கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி உள்ளது கொடுங்கோன்மை. மத்திய அரசுக்கு அதிக வருவாயை கொடுப்பது தமிழ்நாடு தான். மத்திய அரசை எதிர்த்தோம் என்றால் அமலா்கத்துறை, வருமான வரித்துறை அமைப்புகள் சோதனைக்கு வரும் பயப்படுகின்றனா்.
என் வீட்டிற்கு விசாரணை முகமைகள் வர முடியாது. ஏன் என்றால் என்னிடம் ஒன்றும் இல்லை. கறை படிந்திருப்பதால் தான் மாநில உரிமைக்கு பாதிப்பு வரும்போது ஆட்சி செய்பவர்களால் மத்திய அரசை எதிர்க்க முடியவில்லை" என்று சீமான் கூறினார்.