இனி 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் தேர்தலில் வாய்ப்பு.. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு..!
மக்கள் தொகையை அதிகரிக்க புதிய உத்தியாக, ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அனுமதிக்கும் சட்டம் கொண்டு வரப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். குறைந்து வரும் மக்கள் தொகையை அதிகரிக்க அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தென் மாநிலங்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் தென்னிந்தியாவில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2047 ஆம் ஆண்டுக்குள், ஆந்திரப் பிரதேசம் அதிகமான வயதான மக்கள் தொகையை எதிர்கொள்ளும், எனவே குடும்பங்கள் அதிக குழந்தைகளைப் பெறுவதைக் கருத்தில் கொள்ள வேண்டும். 2 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றவர்கள் மட்டுமே உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிடலாம் என்ற சட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.