1. Home
  2. தமிழ்நாடு

1 லட்சம் போட்டா 2 லட்சம் தரோம்னு எமாத்திட்டாங்க - பொதுமக்கள் குமுறல்..!

Q

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சொர்ணபுரி இரண்டாவது தெருவில், ரீ கிரியேட் பியூச்சர் இந்தியா என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை நேற்று மாலை 50க்கும் மேற்பட்ட மக்கள் முற்றுகையிட்டு, தாங்கள் முதலீடு செய்த பணத்தை திரும்ப தரும்படி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனை அறிந்த பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் நெப்போலியன் தலைமையிலான போலீசார், சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த நிறுவனத்தின் கூட்ட அரங்கில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் இருந்தனர். மேலும் அந்நிறுவனத்தில் பணியாற்றி வரும் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்களும் இருந்தனர்.  

அந்த நிறுவனத்தை நடத்தி வந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் நிறுவனத்தை காலி செய்து விட்டு, திருவண்ணாமலைக்கு புறப்பட தயாராக இருந்தார். இதனை அறிந்த போலீசார் ராஜேஷை பிடித்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். 

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செயதால் , பகுதி நேர வேலை மற்றும் முழு நேர வேலை தருவதாகவும் , பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு அதன் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளனர். குறிப்பாக 3500 பணம் செலுத்தினால் அதற்காக காப்பர் மற்றும் எவர்சில்வர் பாத்திரங்கள் , மிக்சி , கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருள்கள் தருவதாகவும் ,  தெரிவித்துள்ளனர். மேலும் பண முதலீடு செய்ததும் , பாத்திரங்களையும் கொடுத்ததோடு , வாரம் தோறும் கமிஷன் பணத்தை முறையாக கொடுத்து வந்ததால் ஏராளமானோர் முதலீடு செய்ய முன்வந்தனர். மேலும் லட்சக்கணக்கில் பணம் முதலீடு செய்தால் , அதற்கு இரண்டு மடங்கு பணம் தருவதாகவும் கூறியதால் , அத்திட்டத்திலும் ஏராளமானோர் லட்சக்கணக்கில் பணம் முதலீடு செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.  

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான பெண்களிடம் இருந்து , கோடி கணக்கில் பணத்தை வசூலித்த ராஜேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் , நேற்று நிறுவனத்தை காலி செய்துவிட்டு புறப்பட தயாராக இருந்ததை அறிந்த , பாதிக்கப்பட்ட மக்கள் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரிவித்தனர் . 

இதனையடுத்து சேலம் மாநகர காவல் துணை ஆணையர் கீதா தலைமையில் உதவி ஆணையர்கள் ரமாளி ராமலக்ஷ்மி, பரவாசுதேவன் மற்றும் போலீசார் அங்கு வந்து அந்த நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பணம் இரட்டிப்பு தருவதாக கூறி ஏராளமான மக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் வசூலித்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கியது.  

தொடர்ந்து அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களிடம் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்களிடம் வசூல் செய்த பணத்தை எங்கு பதுக்கி வைத்திருக்கிறார்கள்? அதை என்ன செய்தனர்? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like