1. Home
  2. தமிழ்நாடு

இன்று தானம் செய்தால் பல ஆயிரம் ஆண்டுகள் பித்ருக்களை திருப்தி செய்த பலன் கிடைக்கும்..!

1

 மாசி மாதத்தில் வரும் அமாவாசை தனிச்சிறப்புடையது ஆகும். மாசி மாதத்தில் வரும் அனைத்து நாட்களுமே சிறப்பானது தான். இந்த மாதத்தில் செய்யப்படும் வழிபாடுகளும், தானங்களும் இரு மடங்கான பலன்களை அள்ளி தரும் என புராணங்கள் சொல்கின்றன. மற்ற மாதங்களில் அமாவாசை நாளில் மட்டுமே முன்னோர் தர்ப்பணம் செய்ய உகந்த நாளாக சொல்லப்படுகிறது. ஆனால் மாசி மாதத்தில் பெளர்ணமி அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது புண்ணியங்களை தரும்.

மாசி அமாவாசை நாளில் அன்னம், தண்ணீர் ஆகியன தானமாக வழங்கினால் பல ஆயிரம் ஆண்டுகள் பித்ருக்களை திருப்தி செய்த பலன் நமக்கும், நமது குடும்பத்திற்கும் கிடைக்கும் என விஷ்ணு புராணம் சொல்கிறது. 

விரத முறை :

* அதிகாலையில் எழுந்து நீராடி, விரதத்தை துவக்க வேண்டும்.

* மாசி மாத அமாவாசை என்பதால் ஆறு, குளங்களில் புனித நீராடுவது நற்பலன்களை தரும்.

* கோவில் குளக்கரை, ஆற்றங்கரை அல்லது கடற்கரையில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட வேண்டும்.

* சடங்குகளை முடித்த பிறகு அந்தணர்களுக்கு அரிசி, காய்கறி, வஸ்திரம் தானமாக அளிப்பது சிறப்பது.

* காகத்திற்கு உணவளித்த பிறகு, நாம் உணவு சாப்பிட வேண்டும்.

* யாராவது ஒருவருக்காவது அன்னதானம் வழங்க வேண்டும்.

* மாலையில் வீட்டில் விளக்கேற்றி, முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும்.

* தொழில், வியாபாரம் செய்பவர்களாக இருந்தால் அமாவாசை நாளில் திருஷ்டி பூசணிக்காய் வாங்கி, அதற்குரிய நேரத்தில் திருஷ்டி கழித்து உடைக்க வேண்டும்.

மகத்துவமான மாசி அமாவாசையில் விரதம் இருந்து முன்னோர்களை வழிபட்டால் பித்ரு லோகத்தில் இருக்கும் அவர்களின் ஆன்மா நற்கதி அடைந்து, நம்மை வாழ்த்தும். 

Trending News

Latest News

You May Like