1. Home
  2. தமிழ்நாடு

இதை செய்தால் ரூ.8.5 கோடி பரிசு வழங்கப்படும்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!!

Q

சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி பன்னாட்டுக் கருத்தரங்கு,சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் கருத்தரங்கு நடைபெறுகிறது. இதனை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், ” ஆரியமும் சமஸ்கிருதமும்தான் இந்தியாவின் மூலம் என்ற கற்பனையை வரலாறாக சொல்லி வந்தனர். அதை மாற்றியது சிந்துவெளி நாகரிகம் குறித்த ஜான் மார்ஷலின் ஆய்வுகள்தான். சிந்துவெளி நாகரிகம் ஆரியத்திற்கு முற்பட்டது, அங்கே பேசப்பட்டது திராவிட மொழியாக இருக்கலாம் என அவர் நூற்றாண்டுக்கு முன் சொன்னது இன்று வலுப்பெற்றுள்ளது” என்று பேசினார்.

தொடர்ந்து பேசுகையில், “சிந்துவெளிப் புதிருக்கான உரிய விடையினைக் கண்டுபிடித்து, சிந்துவெளி எழுத்து முறையினைத் தெளிவாகப் புரிந்து கொள்ள உதவும் வழிவகையினைத் தொல்லியல் அறிஞர்கள் ஏற்கும்படி வெளிக்கொணரும் நபர்கள் அல்லது அமைப்பிற்கு ஒரு மில்லியன் டாலர் பரிசாக வழங்கப்படும். சிந்துவெளி ஆராய்ச்சி மேற்கொள்ளும் வகையில் தலை சிறந்த தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் பெயரில் ஓர் இருக்கை அமைத்திட ரூ 2 கோடி நிதி நல்கை வழங்கப்படும்” என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

Trending News

Latest News

You May Like