1. Home
  2. தமிழ்நாடு

பொதுக்கூட்டத்துக்கு வந்தால் நாற்காலி இலவசம்...குபீர் யோசனையால் குவிந்தது கூட்டம்!

Q

பொதுவாக, அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டத்திற்கு காசு கொடுத்தும், பரிசு பொருட்களை கொடுத்தும், மது வாங்கி கொடுத்தும் ஆட்களை சேர்ப்பது வழக்கம். 

அந்த வகையில், திருப்பூர் பெருமாநல்லூரில் நடந்த கூட்டத்திற்கு ஆட்களை சேர்ப்பதற்காக, அ.தி.மு.க., கையில் எடுத்த புது யுக்தி தான் சமூக வலைதளங்களில் தற்போது பேசு பொருளாகியுள்ளது.

ஆமாம், கூட்டத்திற்கு வருபவர்கள் அமருவதற்காக போடப்பட்ட சேர்களை, கூட்டம் முடிந்த பிறகு, அவரவர்களே எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, சுமார் 1,500 சேர்கள் போடப்பட்டுள்ளது. சேர் இலவசமாக கிடைக்கிறது என்ற தகவல் பரவியதும், பெரும் கூட்டம் கூடியது.

அ.தி.மு.க., தலைவர்களின் பேச்சை முடித்து மைக்கை ஆப் செய்வதற்குள், மக்கள் தாங்கள் அமர்ந்திருந்த சேரை எடுத்து, தலையில் கவிழ்த்து போட்டு விட்டு, வீட்டை நோக்கி நடையை கட்டினர்.

இது தொடர்பான வீடியோ சமுகவலைதளங்களில் வைரலான நிலையில், அ.தி.மு.க.,வினரின் அபார யோசனை அரசியல் கட்சியினரை அசர வைத்துள்ளது.யாரப்பா அந்த ஐடியா மணி என்று...

Trending News

Latest News

You May Like