1. Home
  2. தமிழ்நாடு

உண்மையான ஏக்கத்துடனும் நேர்மையான நோக்கத்துடனும் கூப்பிட்டா கண்டிப்பா கடவுள் வருவாரு - வெளியான சமுத்திரக்கனி படத்தின் டிரெய்லர்..!

1

நடிகர் சமுத்திரக்கனி நடிகை அனன்யா நடித்திருக்கும் படம் திரு.மாணிக்கம்.பாரதிராஜா, நாசர், தம்பி ராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.பி ரவிக்குமார், சிந்தா கோபால கிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் இணைந்து படத்தைத் தயாரிக்கின்றனர்.

'சீதா ராமம்' படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடலாசிரியர்கள் சினேகன், சொற்கோ மற்றும் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த குமுளி, மூணாறு, மேகமலை, தேக்கடி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஜி.பி.ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளனர்.

ஒரு மனிதன் இன்றைய காலகட்டத்திலும் நேர்மையாக இருக்க முடியுமா? அதற்கான சாத்தியம் இருக்கின்றதா... என்ற கேள்விகளோடு இந்தப் படம் தொடங்குகிறது. கதையின் நாயகன் மாணிக்கத்தின் மனைவி, அவனுடைய பெரியப்பா, மச்சினன், மாமியார் இப்படி ஒரு கூட்டமே தனி மனிதன் மாணிக்கத்தை நேர்மையாக இருக்க விடாமல் துரத்துகிறது. கூடவே அராஜகம் பிடித்த போலீஸ்காரர்களும்... அவனைத் தொடர்ந்து துரத்துகிறார்கள். இவர்கள் எல்லோரையும் தாண்டி மாணிக்கத்தின் மனசாட்சியும் அவனைத் துரத்துகிறது, இந்தப் போராட்டத்திலிருந்து மாணிக்கம் எப்படித் தப்பித்து நேர்மையான ஒரு காரியத்தைச் செய்கிறான் என்பதுதான் பரபரப்பாக எடுக்கப்பட்டிருக்கும் திரு.மாணிக்கம் படத்தின் கதை.

இந்நிலையில் படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Trending News

Latest News

You May Like