1. Home
  2. தமிழ்நாடு

விலையை கேட்டால் அப்பப்பா... சின்ன வெங்காயத்தை விலை இது தான்..!

1

தமிழகத்திலேயே பெரம்பலூர் மாவட்டத்தில் தான் சின்ன வெங்காயம் அதிகம் உற்பத்தியாகிறது. சாம்பார் காய் எனப்படும் சின்ன வெங்காயம் காரம் அதிகம் உள்ளதால் வீட்டு சமையலுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கடந்த சில நாட்களாக சின்ன வெங்காயத்தின் விலை திடீர் உச்சமடைந்தது.

இந்த நிலையில் சின்ன வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக திடீர் உச்சமடைந்து உள்ளது. மொத்த மார்க்கெட்டில் 3 ஆயிரம் மூடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் கிலோ ரூ. 90க்கு சின்ன வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது. மேலும் சில்லறை விற்பனையில் கிலோ ரூ. 100க்கு விற்கப்பட்டதால் சாமானிய மக்கள் வாங்கும் அளவை குறைத்துள்ளனர்.

உருளைக்கிழங்கு ஒரு கிலோ 32 ரூபாய்க்கும்,  பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 10  ரூபாய்க்கும்,  சின்ன வெங்காயம் ஒரு கிலோ 100  ரூபாய்க்கும்,  பெரிய வெங்காயம் 1  கிலோ 30 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனையாகி வருகிறது. பண்டிகை காலம் என்பதால் அனைத்து காய்கறிகளும் விலை அதிகரித்து உள்ளது.

Trending News

Latest News

You May Like