1. Home
  2. தமிழ்நாடு

இனி விடுமுறை கேட்டால் கொடுங்க - டிஜிபி அதிரடி உத்தரவு!

1

தமிழகத்தில் காவல்துறையில் காலியாக உள்ள காலிப் பணியிடங்கள் பலவும் நிரப்பப்படாமல் தற்போது வரை இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் போதுமான காவல்துறை அதிகாரிகள் இல்லாமல் ஒன்றுக்கும் மேற்பட்ட பணிகளை செய்ய வேண்டியதுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட டிஐஜி விஜயகுமாரின் மரணம் தமிழக காவல்துறை முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது, விஜயகுமார் கடந்து சில நாட்களாகவே மன அழுத்தத்தில் இருந்ததாகவும், ஆனாலும் விடுமுறை எதுவும் இல்லாமல் தொடர்ந்து பணியில் இருந்ததாகவும் சக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், காவல்துறை அதிகாரிகளுக்கு எந்தவித மன அழுத்தமும் தர கூடாது என்பதற்காக தமிழகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு கட்டாயமாக போதுமான வசதியினை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும், குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் எனவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், காவலர்கள் முக்கியமான நேரங்களில் விடுப்பு கேட்கும் போது கட்டாயமாக விடுமுறை அளிக்க வேண்டும் எனவும், அதிகாரிகளை கட்டாயப்படுத்தி பணியமர்த்த கூடாது எனவும் தற்போது டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like