1. Home
  2. தமிழ்நாடு

ஆளும் கட்சி ஆதரவாளர் என்றால் என்ன வேணாலும் செய்யலாமா ? என் காலில் முத்தம் கொடு.. இளைஞரை மிரட்டிய ரவுடி

1

திருவனந்தபுரம் அருகே கழக்கூட்டம் பகுதியில் ஒரு இளைஞரிடம் இருந்து பறித்த செல்போனை திருப்பி தர வேண்டுமென்றால், காலை பிடித்து முத்தமிட வேண்டும் என ரவுடி டேனி மிரட்டியுள்ளார். இதனால் பயந்து அடிபணிந்த இளைஞர் அந்த ரவுடியின் காலில் பலமுறை விழுந்து காலில் அணிந்த ஷூவில் முத்தமிட்ட வீடியோ வைரலாக பரவியுள்ளது.

திருவனந்தபுரம் பகுதியில் உள்ள தும்பா காவல் நிலைய எல்லைக்குள் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாகத் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேங்க்ஸ்டர் ஏர்போர்ட் டேனி மற்றும் டேனிக்கு உதவுவதற்காக பைக்கில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் இந்த கொடூர செயலில் ஈடுபட்டிருப்பது வெளியான செல்ஃபோன் வீடியோவில் பதிவாகி உள்ளது .


 


சம்பவத்தன்று, ரவுடி டேனி பைக்கில் சென்ற வாலிபர் ஒருவரை அனந்தபுரி மருத்துவமனை அருகே வைத்து கொடூரமாக தாக்கியுள்ளார். அதன்பின் அந்த வாலிபரின் கையில் இருந்த செல்போனை பறித்த டேனி, சொன்ன இடத்துக்கு வா போன் தருகிறேன் என்று கூறியுள்ளார். பின்னர், அந்த இளைஞர் செல்போனை வாங்குவதற்காக ரவுடி டேனி சொன்ன கரிமணல் பகுதிக்கு பைக்கில் சென்றுள்ளார்.

அங்கு கும்பலுடன் காத்திருந்த டேனி அந்த இளைஞரை தனது அருகில் அழைத்து, செல்போன் வேண்டுமென்றால் என் காலில் விழுந்து வணங்குமாறு கத்தியுள்ளார். அந்த இளைஞர் டேனியின் காலில் 3 முறை விழுந்துள்ளார். தொடர்ந்து டேனி அந்த இளைஞரை தகாத வார்த்தைகள் பேசி காலில் முத்தமிட கூறியுள்ளார். மேலும் அவ்வாறு செய்யவில்லை என்றால் அடிப்பேன் என்றுள்ளார்.

Police-arrest

மிரட்டலுக்குப் பயந்து அந்த இளைஞர் டேனியின் காலில் முத்தம் கொடுப்பதையும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்வலைகளையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நடைபெற்று சில தினங்கள் ஆகியும் டேனி என்பவர் ஆளும் கட்சி ஆதரவாளர் என்பதால் அவர் மீது இன்னும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று சமூக வலைதளங்களில் பலர் கடும் கண்டன குரல் எழுப்பி வந்தனர்.

மேலும் இது தொடர்பாக நடந்த விசாரணையில், பாதிக்கப்பட்ட இளைஞர்  திருவனந்தபுரம் அருகே மலையின் கீழ் பகுதியைச் சேர்ந்த தலித் இளைஞர் என்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், தும்பா போலீசார் ரவுடி டேனியலை கைது செய்து, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் பிரிவில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Trending News

Latest News

You May Like