1. Home
  2. தமிழ்நாடு

இந்த கோவிலுக்கு சென்றால் நம்முடைய தலைவிதி மாற்றி எழுதப்படும்..!

1

மனம் சோர்வாக உணரும் போது கோவில்களுக்கு செல்கிறோம். அப்படி நாம் செல்லும் போது இந்தியாவில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றால் நம்முடைய தலைவிதி மாற்றி எழுதப்படும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

அப்படி ஒரு அதிசய கோவில் தான் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் அமைந்துள்ள திரியம்பகேஷ்வரர் கோவில். சிவ பெருமானின் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாக இருக்கும் இக்கோவிலில் சிவ பெருமான் மூன்று முகங்களுடன் காட்சி தருகிறார். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் முகங்களும் ஒரே லிங்கத்தில் இருப்பது போன்ற லிங்க வடிவமாக சிவ பெருமான் காட்சி தரும் இடம். இது பிரபஞ்ச சக்திகளின் ஒருங்கிணைந்த வடிவமாக கருதப்படுகிறது. படைத்தல், காத்தல், அழித்தல் தொழில்களுக்கு உள்ள தெய்வங்கள் ஒன்றாக அமைந்த இடம் என்பதால் இங்கு வந்து வழிபட்டால் நம்முடைய தலைவிதி எவ்வளவு மோசமாக இருந்தாலும் அது மாற்றி எழுதப்படும் என சொல்லப்படுகிறது.

இக்கோவிலுக்குள் குஷவர்த்த குண்ட் என்ற தீர்த்தம் உள்ளது. இது கோதாவரியில் இருந்து உருவானது சொல்லப்படுகிறது. அதனால் இதை தென்னகத்து கங்கை என்றும் அழைக்கிறார்கள். இங்கு காலஷர்ப்ப தோஷ பூஜை செய்து வழிபட்டால் நவகிரகங்களில் எந்த கிரகத்தால் பாதிப்பு இருந்தாலும் அது நீங்கி விடும் என சொல்லப்படுகிறது. இந்த கோவிலில் நடைபெறும் மற்றொரு பிரபலமான பூஜை நாராயண் நக்பலி பூஜை. துர்மரணம் அடைந்த குடும்ப உறுப்பினர்களின் ஆன்மாக்களால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்காக செய்யப்படும் பூஜையாகும்.

இக்கோவிலில் உள்ள மூலவர் லிங்கம் எப்போதும் தண்ணீருக்கு அடியிலேயே உள்ளது. அந்த அளவிற்கு கருவறையில் தண்ணீர் ஊற்றெடுத்துக் கொண்டே இருக்கும். இந்த நீரூற்ற பெருகி வருவது மும்பெரும் தேவர்களின் பேராற்றலை குறிப்பதாக நம்பப்படுகிறது. இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டால் முக்தி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த கோவில் குளமான கோதாவரி ஆற்றில் மூழ்கி எழுந்தால் பாவங்கள் நீங்கி, மோட்சத்தை அடைய முடியும் என சொல்லப்படுகிறது. அவர்கள் பிறப்பு-இறப்பு சுழற்சியில் இருந்து விடுபடுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

Trending News

Latest News

You May Like