1. Home
  2. தமிழ்நாடு

நாம ஆசைப்பட்ட விஷயத்திற்காக தப்பான வழியில் போனா... இணையத்தில் வைரலாகும் கருடன் பட ட்ரைலர்..!

1

 'கருடன்' என்கிற முழு நீள ஆக்ஷன் படத்தில் சூரி நடித்து வருகிறார். வெற்றி மாறன் கதை மற்றும் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, உன்னி முகுந்தன், ரேவதி ஷர்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு கும்பகோணம், தேனி போன்ற பகுதிகளில் பெரும்பாலும் படமாக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.. இந்த நிலையில் கருடன் படம் இம்மாதமான மே-யில் வெளியாகிறது என அறிவித்துள்ளனர். 

நடிகர் சூரி கோவை ப்ரோசோன்  மாலில் கருடன் படம் குறித்து செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் கூறியது .....

காமெடியனாக பார்க்கப்பட்ட சூரி விடுதலை திரைப்படத்திற்கு பிறகு வேறு மாதிரியான ஒரு ஜானரில் இருந்திருப்பேன் அதே போல் இந்தப் படத்தில் வேறு ஒரு பரிணாமத்தில் இருந்திருப்பேன் என நம்புகிறேன். கதாநாயகனாகவே தற்பொழுது தனக்கு வாய்ப்புகள் வந்துள்ளதாகவும் காமெடியனாக வாய்ப்புகள் தற்போது வரவில்லை. 

மேலும் இந்த படத்தில் நடிகர் சசிகுமார் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.விடுதலைப் படத்தில் இருந்தது போலவே இந்த படத்திலும் சிறிது கஷ்டங்கள் அனுபவித்துள்ளேன்அதற்கான பலன் நிச்சயமாக கிடைக்கும் என நம்புகிறேன். 

காமெடி கதாபாத்திரங்களை நடிக்கும் பொழுது அதற்கான காட்சிகளை மட்டும் நடித்துவிட்டு சென்று விடுவோம்  தற்பொழுது கதாநாயகனாக நடிக்கின்ற போது மிகப்பெரிய பொறுப்புணர்ச்சி இருப்பதாக உணர்கிறேன்.

மேலும் தான் கடந்து வந்த பாதையை நினைத்து பெருமை கொள்வதாகவும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. வெற்றிமாறன் இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு மிகவும் நன்றாக இருப்பதாகவும் தனக்கு இன்னொரு விடுதலை படமாக இது அமையக்கூடும் என்று கூறி இருப்பதாகவும் நடிகர் சூரி தெரிவித்தார்.

இதனையடுத்து, படத்திற்கான டிரைலர் இன்று வெளியிடபட்டுள்ளது. ட்ரைலரில் வரும் காட்சிகள் எல்லாம் மிகவும் அருமையாக இருக்கிறது. அதைப்போல சூரியின் நடிப்பு மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை அருமையாக இருப்பதால் படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.

Trending News

Latest News

You May Like